Skip to main content

எரும எமோஜி

 


ரைமணி நேரத்து பிரிவுக்கு அஞ்சி
நீ அனுப்பி வைத்த எருமைகளில்
சேறும்,  பாலும் கமழ்ந்தன.
அதன் கொம்பிற்  மின்னியதொரு வனமலர்.
பிறகு வந்ததொரு  கொடுங்காலம் 
எருமை வரத்து 
கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து
அருகி ஒழிந்துவிட்டது.
என்னதான் ஆனதடி நம் எருமைகளுக்கு?
நேற்று , அவை
அருவெங் கானத்திடை
துளிநீர் வேட்கையில்  மயங்கிய போழ்தில்
உழுவை சீற, உள்ளம் நடுநடுங்கி
கதவுடைத்து வந்து
என் கனவுக்குள் ஒளிந்ததடி தோழி!!

Comments