ஓடுகிற பையன் எமோஜி நான் ஒரு இக்கட்டான தருணத்தில் அவனை வாட்ஸ் அப்பில் சந்தித்தேன் சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டு ஓடும் பையனாக சொல்லி ஆக வேண்டியதை சொல்லிவிட்டு ஓடும் பையனாக அவன் ஒரு பொடியன் என்பதால் “விளையாட்டுக்குத்தான் சொன்னேன்..” என்று சொல்லிவிடுவது அவனுக்கு எளிது ஆகவே சொல்லியும் சொல்லாமல் இருப்பதில் அவன் சமத்தன் அவன் வெறுமனே ஒரு கேள்வி அவனுக்குப் பதில்களில் ஆர்வமில்லை ஆகவே எதையும் அவன் நின்று கேட்பதில்லை “இந்த வாழ்வில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்களில்லை ..” என்று யாரோ ஒரு சாமியார் சொன்னதை அரைகுறையாக கேட்டுவிட்டு வந்த அப்பாவிச் சிறுவனவன், “சாப்பிட்டீங்களா..?” என்று கேட்டுவிட்டு ஓடி விடுவான். நாசகாரக் கும்பல் எனக்குத் தெரியும் இங்கு காணும் எல்லாத் துன்பங்களுக்கும் இந்தக் கவிஞர்கள்தான் காரணம் மண் மண்ணென்றிருந்தது இவர்கள் அதில் சொர்க்கத்தைக் கட்டி எழுப்பினார்கள் சொர்க்கம் என்ற ஒன்று எழுந்ததால் அதிலிருந்து நரகம் என்று ஒன்று தானே எழுந்து கொண்டது கண்ணெறிருந்த கண்ணில் இவர்கள் கயலைத் தூக்கிப் போட்டார்கள் இடையென்றிருந்த இடையில் வேலியில் படரும் கொடியைக் கொண்டு வந்து சுற்றி விட்டார்கள் பேசினால் விளங்கிவிடும் ஒவ்வொன்றையும் இவர்கள் பாடிப் பாடி ஜோடிப்பார்கள் இவர்தம் குலத்தொழிலாவது உள்ளதை உள்ளபடி விட்டு வைக்காதது கூடவே ஊதி ஊதி பெருக்குவது துள்ளிக் குதிக்காதது சோர்ந்து விழாது நம்புங்கள், கவிதைதான் கடவுளின் நயவஞ்சகம் சற்றே உப்புக் குறைவான ஒரு பண்டத்தை நாம் கொஞ்சம் சமாளித்துக் கொள்ள முடியுமெனில் இந்த நாசகாரக் கும்பலை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து விடலாம். இரவுக் காவலாளியின் ” அனுபவம் புதுமை” 1. ஒரு நாளும் வாராமல் இராத இரவு இதோ வந்து விட்டது கூடவே வந்துவிட்டது இரவின் குரல் இரவின் குரலாவது ஸ்ரீனிவாசின் குரல் இரவின் ராஜா பேங்கோஸ் குதிரையில் வந்திறங்குகிறார் மனிதர்கள் ஓய்ந்தடங்கிய பின்பு இரவு பாடத் துவங்குகிறது இரவு பாடும் போது விலகிச் செல்கிறது இருட்டு பகலெல்லாம் மூடிக்கிடந்த வானத்தை மெல்ல மெல்ல திறக்கிறது அப் பாட்டு இரவைப் போல ஆழமான பாடகரென்று இன்னொருவரில்லை 2. அண்ணாந்த கதியில் அவள் சொன்னாள்… “ இரவு மெல்ல மெல்ல பாடத் துவங்கி விடுகிறது , இல்லையா?” அதே கதியில் நான் சொன்னேன்.. “ஆம். அது ஸ்ரீனிவாசைப் போலச் செய்யப் பார்க்கிறது..” 3. “பகலெல்லாம் பி.பி. எஸ் பாடுவதில்லையா என்ன?’ பாடத்தான் செய்கிறார் ஆனால் அப்போது அவர் ஒரு பரிதாபத்திற்குரிய பாடகர் 4. எல்லோரும் நினைப்பது போல இரவில் பாடுவது நிலவல்ல எப்போதும் வெளிச்சம்தான் பாட வேண்டும் என்றில்லை 5. பாட்டின் மர்மமே.. நீ தானா அது? இரவில் ஜொலிக்கும் அது 6. கேட்பவர் பாடுகிற பாடல் என்பது வேறு. |
கே ரட் கண்ணிற்கு மிக நல்லது இரு, இரு பச்சையாக உண்பதே நல்லது முட்டை புரதச்சத்து மிக்கது இரு இரு வெள்ளைக்கரு மட்டும்தான் நல்லது கீரை யுண்டால், பீடை யில்லை இரு, இரு முட்டையுடன் உண்டு தொலைக்காதே ஆப்பிள் ஒரு இரத்தக் காட்டாறு இரு, இரு உப்பிட்ட வெந்நீரில் நன்றாகக் கழுவ வேண்டியது அவசியம் வானகமே, இளவெயிலே, மரச்செறிவே! இரு, இரு பால்காரன் வந்துவிட்டானா? ஆற்றுக்குளியல் அருமையோ அருமை இரு, இரு கிடங்குகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது உடற்பயிற்சி மிக மிக முக்கியம் இரு, இரு அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தூங்காதே தம்பி, தூங்காதே! இரு, இரு எவ்வளவு உறக்கமோ, அவ்வளவு ‘விழிப்பு’ வெளி திறந்து கிடக்கிறது இரு, இரு ஃபீல் அட் ஹோம் பணத்தினைப் பெருக்கு இரு, இரு ரஸத்திலே தேர்ச்சி கொள் “நீ வாழ பிறரைக் கெடுக்காதே” இரு, இரு வலுத்ததே வாழும் பிறப்பு என்றிருந்தால் இறப்பு என்றிருக்கவே செய்யும் இரு, இரு சுமாராகவேனும் வாழ்ந்திருக்க வேண்டும் உன்னதங்களின் உன்னதம் எதுவென்றுரைத்தால் அது கவிதைதான் இரு, இரு கவிதையைப் பார்த்துக் கொண்டே வாழ்கையை கோட்டை விட்டு விடக்கூடாது....

Comments