புலராத அதிகாலையிலேயே மருத்துவமனை வளாகத்தில் கூட்டம் கூடி விட்டது. முதலில் அவர்கள் டோக்கன் வாங்க வேண்டும் அந்த டோக்கனைக் காட்டி சீட்டு வாங்க வேண்டும் அந்த சீட்டைக் காட்டி மருத்துவரை வாங்க வேண்டும். மருந்துச் சீட்டைக் காட்டி மருந்துகள் வாங்க வேண்டும் டோக்கன் கொடுக்கும் அந்த ஒல்லிப்பெண் மருத்துவமனைக்கு வெளியே எவ்வளவு பாவம் தெரியுமா? “ எங்கயோ அந்த மகராசிய இன்னுங் காணல…” என்று முனகுகிறார் ஒரு முதியவர். பிணி நீங்கும் முன்பே மருத்துவமனையை விட்டு ஓடி விடுகிறவர்கள் எதிலிருந்து தப்பிக்கிறார்கள்? எல்லா முகங்களிலும் அப்பிக் கிடக்கிறது கும்மிருட்டு கல்லிடுக்கில் எழுந்து கொண்டிருக்கும் கதிரவன் மெல்ல வரட்டும் இப்போதைக்கு நான் டியூப் லைட்களை போட்டு விடுகிறேன். |
Comments