அலுவலக நுழைவாயிலில் நின்று கொண்டு தன் குழந்தைக்கு “ bye” சொல்கிறாள் அம்மா. அம்மா மட்டுமே சொல்லும் அந்த “ bye” அதைத்தான் அவள் சொன்னாள் அவள் அலுவலகத்துள் மறைந்து விட்டாள். குழந்தை அப்பாவோடு கிளம்பி விட்டது வாயிலில் தனியே நின்று கொண்டிருந்த “ bye” - யிடம் “என் வீட்டுக்கு வருகிறாயா? ” என்று கேட்டேன். இப்போது நாங்கள் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறோம். |
Comments