Skip to main content

காதலைப் பாடாதிருப்பதன் கடினம்


காமம் வதைக்காத உயிர் எது? எவ்வளவு லட்சியங்களை, எவ்வளவு உன்னதங்களை காவு கொள்ளும் காளி அது? எத்தனை மகத்துவங்கள் அதன் முன் வாலைச்சுருட்டி கொண்டு மூலையில் அமர்ந்திருப்பதை நாம் பார்த்துவிட்டோம். சங்கக்கவித் திரட்டு முழுக்கவும் தலைவியரைப் பசலை படாத பாடு படுத்தியுள்ளது. பரணர் பசலைக்கு கிணற்றுப் பாசியை உவமை சொல்கிறார். ஊரார் உண்ணத் தொடும் போது அது விலகி நிற்கிறது. மறுகணமே திரண்டுவிடுகிறது. அது போல் தலைவன் தொடுந்தோறும் தொடுந்தோறும் விலகி , விடுந்தோறும் விடுந்தோறும் பாய்கிறதாம் பசலை. ஒரு புலி போலவா? ஆம்...


கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை இன்றைய அகழ் மின்னிதழில் வெளியாகியுள்ளது. முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது.


நன்றி அகழ்! 


Comments

Thendral said…
வணக்கம் !!! நெருங்கிய நபர் ஒருவர் திரு இசை அவரின் கவிதை blog link குடுத்து பிடித்தாள் வாசி என்று சொன்னதால் படிக்க ஆரம்பித்தேன். சாமானிய மக்களின் இடிபாடுகளை கவிதையாக திரு. இசை எழுதியது ஈர்க்கக்கூடியதாக இருந்ததில் எந்த ஐயமும் இல்லை.
சில கருத்துக்கல் துளிர் விட செய்த சிந்தனைகள், கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம். நாம் எந்த கண்ணோட்டத்தில் படிக்கிறோம் என்பது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை தான் போல.
"காதல்" வயதாகி இறந்தே போகும் என்று நம்பிய பல மனிதர்கள் இல்லாமல் போனதை பார்த்துதான் இருக்கிறது இந்த லோகம்.
ஒருவன் ஒருத்தியை விரும்புவது, அவள் அவனயே விரும்புவது அரிது இந்த ஆச்சிரியம் போதாதுன்னு திருமணத்தில் முடிகிறது. இது பேரானந்தம் இல்லையா?
இது இடியாப்ப சிக்கலை விட பெரிய சிக்கல் ஏதும் இல்லை என்பது உலகம் அறிந்த விஷயம். அதனால் தானோ மிகவும் எளிமையாக சொல்லியிருக்கிறார் கபிலர். அவருக்கு தெரியாதா ? அவர் தான் ஞானி ஆயிற்றே!!! ஒரு சிறு செய்கையை அழகாக வர்ணிப்பதும் , பிரம்மாண்டமான விஷயத்தை மிக எளிமையாக சொல்லுவதும் கவிஞனின் ஆற்றல் என்பதை மறுபரிசீலனை செய்யாமல் ஏற்றுக்கொள்வது ஒரு ஞானம் என்றே சொல்கிறது மெய்ஞானம்.

ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் தமிழும் அதன் அழகும் கொஞ்சமும் குறைந்தது இல்லை!!! Google translate, Bing translate காலாவதியானதையும்
இப்போ chat GPT, perplexity AI யை தமிழும் இலக்கியமும் நின்று பார்த்து ரசித்துக்கொண்டே தான் இருக்கிறது.

திரு.இசைக்கு வாழ்த்துக்கள். ஔவையார் என்று சொன்னால் சுந்தராம்பாள் எப்படி ஞாபகத்துக்கு வராங்களோ, அதே போல் ஐயன், ஔவையார் , கபிலர், கம்பன் என்று சொன்னால் மிக சிறந்த கவிஞனின் வரிசையில் திரு இசை இடம்பிடித்து இருக்கிறார் என்பதில் ஒரு அணு அளவும் சந்தேகம் இல்லை . திரு இசையின் பயணம் இன்னும் பல முக்கிய கவிஞரின் நல்ல சிந்தனைகளை எளிய முறையில் இந்த காலத்துக்கு ஏற்றார் போல எழுத வாழ்த்துக்கள் சொல்லி நிறைவு அடைகிறேன்

Popular posts from this blog

பினாயில் பாட்டிலும், குச்சித்துடைப்பமுமாய் ஒரு வசந்த சுந்தரன்

   ஒ ருவர் இன்னொருவருக்கு சால்வை அணிவிக்கும் அரசு அலுவலகத்தின் சம்பிரதாயமான நிகழ்வு அது ஊழியர்களும், அதிகாரிகளும் வரிசை கட்டி நிற்கிறார்கள் போட்டோவில் சம்பிரதாயமாக நிற்பது எப்படி என்பதை யாரும் அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை வரிசைக்குப் பின்னே தட்டிக்கும் பின்னே குதிகால்  உயர்த்தி தலை மட்டும் நீட்டி  ஒரு உருவம் மொத்தப்  படமும் அதுவே ஆகி என் சிந்தையை அழைக்கிறது போட்டோவில் விழுந்துவிடும் துடிப்பல்ல அது மூளியை  அலங்கரிக்க    வந்தவன் போல் அவன் வருகை

அன்புள்ள தம்பிக்கு

  இ ன்று அதிகாலையில் ஒரு தத்துவத்தை அனுப்பியிருந்தாய் பிறகு அரை மணி நேரம் கழித்து ஏனோ நீ அதை அழித்தும் விட்டிருந்தாய் அந்த  உண்மை உண்மைதான் அது எனக்குப்  பிடித்தே இருந்தது. அதை அவ்வளவு உறுதியாக அழித்துவிட்டதன் மூலம் நீ இன்னொரு உண்மையைச் சொல்கிறாய் அதுகூட  உண்மையாகத்தான் இருக்க வேண்டும் ஒரு உண்மையிலிருந்து இன்னொரு உண்மைக்குப் போக 30 மணித்துளிகள் போதும் என்கிற உண்மை இருக்கிறதே உள்ளதிலேயே  முக்கியமான உண்மை அதுதான் தம்பி

சுமார்

எ னக்கே தெரியும் , 'இசைக்கலைஞர்களை இசை பார்த்துக் கொள்ளும் ' என்பது ஒரு உணர்ச்சிகரமான உண்மைதான் ஆயினும் நேற்றொரு கிட்டார் கலைஞனிடம்  பேச்சுக் கொடுத்தேன் என் தோளில் கையூன்றி  இதழ்கடை விரித்தார்... "சுமாரா பாத்துக்கும் பாஸ்"