2008 - ல் இளங்கோவின் காயசண்டிகை நூலிற்கு எழுதிய மதிப்பரையில் துவங்கி 2013 - ல் லிபிஆரண்யாவின் " உபரிவடைகளின் நகரம்" நூலிற்கு எழுதியிருக்கும் விமர்சனக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக கொண்டுவரவுள்ளேன். பின்னிணைப்பாக "கொம்பு ' இதழில் வரவுள்ள பேட்டியும் உண்டு. நூலை சந்தியா பதிப்பகம் வெளியிடவுள்ளது. பாரதி , ஒளைவை , அம்பிகாபதி , ஒப்பிலாமணிப்புலவர் , இராமச்சந்திரகவிராயர் , மதுரகவிராயர் , சத்திமுத்தப்புலவர் , காளமேகப்புலவர் , எம்.கே.டி , பெருமாள்முருகன் , ஸ்ரீநேசன் , ராணிதிலக் , எஸ்.செந்தில்குமார் , இளங்கோகிருஷ்ணன் , தூரன்குணா போன்ற அறிவினர் குழுமியிருப்பதால் " அதனினும் இனிது அறிவினர் சேர்தல்" என்கிற தலைப்பு பொருத்தமுடைத்தாகிறது. தொகுப்பிற்கான தலைப்பை தந்தமைக்காக ஒளைவையின் பாதங்களில் விழுந்து தொழுகிறேன்.