
கண் கொள்ளா காட்சி
கண் கொள்ளா காட்சி என
கத்தி ஒன்றைக் கண்டேன்.
அதன் தகதகப்பில் மனமழிந்து
பித்தானேன்.
நெஞ்சைக் கீறி ரத்தமீந்தேன்
அதன் கூர் நுனிக்கு.
முதல்கலவியென வருடி வருடித் திளைத்தேன்.
ஏற்கனவே வெட்டுண்ட
ஒரு கோடி தலைகளுள் ஒன்றாகும் மோகத்தால்
கொல்! கொல் !
என்று மண்டியிட்டு கதறுகிறேன்.
Comments
//முதல்கலவியென வருடி வருடித் திளைத்தேன்//
Wow