Skip to main content

கருணையின் ராஜா

பல நாள் திருடன் நான் இறந்துக் கிடக்கிறேன்
என்னை ஒரு நாளும் அகப்படாமல் இறக்கச் செய்தீர்
ஸ்தோத்ரம் ஆண்டவரே
சில ஈக்களை அனுப்பி என் முகத்தின் திருட்டு களையை
பறந்து போகப்பண்ணினீரே
ஸ்தோத்ரம் ஆண்டவரே
யோக்கியத்தின் கல்லிலிருந்து என்னை தப்புவித்தீர்
கருணையின் ராஜா !
உமக்கு நன்றி ஐயா

Comments

முந்திக்கிறேன்னுல்லாம் சொல்லமாட்டேன். என்னால எழுதமுடியாமதான் விட்டுடறேன்.ஆனா,கவிதையைக் கண்டுபிடிச்சு எழுதுற பார்..அங்கேதான் வித்தியாசம் இருக்குது.

இவ்வளவும் எதுக்கு சொல்றேன்னா, இந்தக் கவிதை எனக்குத் தர்ற நெருக்கம்தான்.
மிகவும் நெகிழ்ச்சியூட்டக்கூடிய கவிதை. பகிர்விற்கு நன்றி.

Popular posts from this blog

சுமார்

எ னக்கே தெரியும் , 'இசைக்கலைஞர்களை இசை பார்த்துக் கொள்ளும் ' என்பது ஒரு உணர்ச்சிகரமான உண்மைதான் ஆயினும் நேற்றொரு கிட்டார் கலைஞனிடம்  பேச்சுக் கொடுத்தேன் என் தோளில் கையூன்றி  இதழ்கடை விரித்தார்... "சுமாரா பாத்துக்கும் பாஸ்"

வாய்ஸ் மெசேஜ் பாவங்கள்

தூ ராதி தூரம் சென்றுவிட்டாய் நீ உன் குரல்களோ  என்னிடமே தங்கிவிட்டன. காலம்  பேச்சைப் பாட்டாக்க வல்லது அடீ ... !  அந்தப் பாடல்களை இனி கேட்கவே முடியாது. உபயோக்கிக்கவும் முடியாத தூக்கியெறியவும் முடியாத பொருட்களின் துருவோடு துருவானது நம் நேசம் லேசாக அழுத்திப் பிடித்தால் போதும் எல்லாவற்றையும்  அழித்து விடலாம் என்கிறது  நவயுகம்.  அவ்வளவு பலத்திற்கு நானெங்கு போவேனென மறுகி நிற்கிறது ஒரு பழைய உயிர்

‘இதயம் முரளி'யரின் காலாதிகாலம்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை இன்று வெளியாகியுள்ளது. ‘இதயம் முரளி'யரின் காலாதிகாலம்  வாசிப்பதற்கான இணைப்பு  https://akazhonline.com/?p=13791