Skip to main content

இந்த போதைக்கு யாருமில்லை



  


இந்த போதைக்கு யாருமில்லை
 சிகரெட்டும், நீலப்படமும் அலுத்துப்போன இந்த போதைக்கு
யாருமில்லை.
  
இந்த போதையின் டேபிளில் பரிமாறப்பட்ட கறி
குஞ்சாகிப் பறந்து விட்டது.
 இந்த போதைக்கு யாருமில்லை

 இந்த போதை ஒரு செவிட்டு முண்டம்
 அதனால் ஒரு வயலின் துண்டு
 கூட  இல்லை.

 இந்த போதை தன் அத்தனை கண்களையும் திறந்து பார்த்தும்
 வானத்தில் நிலவு இல்லை
 இந்த போதைக்கு யாருமில்லை

இந்த போதைக்கு அவ்வளவு மோசமாக மரத்துவிட்டது
ஆகவே கண்ணீர் சிந்த வழியில்லை.

சென்ற போதைக்கு நாசூக்கு தெரியவில்லை
எனவே இந்த போதையில்
தோழிமார் உடன் இல்லை.
இந்த போதைக்கு யாருமில்லை

சிகரெட்டும், நீலப்படமும் ,நண்பர்களும் அலுத்துப்போன
இந்த போதைக்கு யாருமில்லை.

இந்த போதையை எப்படித்தான் ஆவியாக்க அம்மே !


Comments

ஆவியானவுடன் தெரிந்து விடலாம்...! ஹிஹி...