மஞ்சள் என்று சொல்லி விட முடியாதபடிக்கு
ஒரு வித மரக்கலரில்
இடையே கொஞ்சம் பச்சை வாங்கி
சிவந்த பொன்னிறத்தில்
கிறங்கடிக்கும் வாசனையுடன்
நடுமத்தியில்
அளவானதான அழகான ஓட்டையோடு
நாவூறித் ததும்பச் செய்யும்....
உலகத்தை வெல்வது கிடக்கட்டும்
முதலில்
இந்த உளுந்து வடையை வெல்!
நன்றி: ஆனந்த விகடன்
Comments