கோடையைச் சமாளிக்க இளநீர் பருகலாம். லெமன் ஜூஸ்சோ, பியரோ அருந்தலாம். நாளொன்றுக்கு நான்கு முறை நீராடலாம். மண்பாண்டங்களுக்கு மாறலாம். குளிர்சாதனப் பெட்டிக்குள் ஒளிந்து கொள்ளலாம். கொசுப்படைக்குத் துணிந்து மொட்டை மாடிகளில் தஞ்சமடையலாம். ஏ.சியைக் கூட்டி வைக்கலாம். மின்விசிறிகளை 50- ல் சுழல விடலாம். ஆணென்றால் மேலாடையைக் கழற்றி விடலாம். பெண்னென்றால் உள்ளாடைகளைத் தீயிட்டுக் கொளுத்தலாம். மலைப்பிரதேசங்களுக்கு ஓடவோ அருவிகளை நாடவோ செய்யலாம். நீ மட்டும் உள்ளே வற்றி உலராமல் இருந்தால் கவிதையும் எழுதலாம். |
Comments