Skip to main content

வித் அவுட்

 




தன் 52 வது வயதில்

அவனொரு அழகிய "coffee mug" - ஐ கண்டான்

கண்ட கணமே மதியழிந்து போனான்.

தூவெள்ளையில்

வயலெட் வண்ணத்தின் உட்சபட்ச கலைமயக்கம்

அதைக் கையில் ஏந்தி கண்ணாடி முன் நின்றால்

மொகலாயப் பேரரசனொருவன்

ஹூக்கா புகைத்தபடி தோன்றுகிறான்.

தன் பழங்கிழட்டு கிராமத்தின்

மங்கிய சில்வர் டம்ளர்கள்

அவன் நினைவில் கசந்து

தொண்டையை அறுத்தன.

230 ரூபாய்க்கு கோப்பையை வாங்கிவிட முடிந்தது.

பிறகுதான் தெரிந்தது

அதனுள்ளே அவன் மருத்துவர் இருப்பது.

கொண்டைப் பிரம்பை சுழற்றித் திரியுமவர்

சர்க்கரைப் பைகளை எரித்துப் போட்டுவிட்டு

உயிரற்ற திரவத்தை

அதில் நிரப்பி அனுப்புகிறார்.

அதைக் காபியின் சடலம் எனலாம்.

கோப்பையைத் தூக்கிக் கொண்டு

ஒரு சூறை எழும்பி ஓடுகிறது

தன் 22 வது பிராயம் நோக்கி


Comments

Popular posts from this blog

சுமார்

எ னக்கே தெரியும் , 'இசைக்கலைஞர்களை இசை பார்த்துக் கொள்ளும் ' என்பது ஒரு உணர்ச்சிகரமான உண்மைதான் ஆயினும் நேற்றொரு கிட்டார் கலைஞனிடம்  பேச்சுக் கொடுத்தேன் என் தோளில் கையூன்றி  இதழ்கடை விரித்தார்... "சுமாரா பாத்துக்கும் பாஸ்"

வாய்ஸ் மெசேஜ் பாவங்கள்

தூ ராதி தூரம் சென்றுவிட்டாய் நீ உன் குரல்களோ  என்னிடமே தங்கிவிட்டன. காலம்  பேச்சைப் பாட்டாக்க வல்லது அடீ ... !  அந்தப் பாடல்களை இனி கேட்கவே முடியாது. உபயோக்கிக்கவும் முடியாத தூக்கியெறியவும் முடியாத பொருட்களின் துருவோடு துருவானது நம் நேசம் லேசாக அழுத்திப் பிடித்தால் போதும் எல்லாவற்றையும்  அழித்து விடலாம் என்கிறது  நவயுகம்.  அவ்வளவு பலத்திற்கு நானெங்கு போவேனென மறுகி நிற்கிறது ஒரு பழைய உயிர்

‘இதயம் முரளி'யரின் காலாதிகாலம்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை இன்று வெளியாகியுள்ளது. ‘இதயம் முரளி'யரின் காலாதிகாலம்  வாசிப்பதற்கான இணைப்பு  https://akazhonline.com/?p=13791