Skip to main content

தத்துவம்




"வந்தவர் என்றால்

 சென்றிட வேண்டும்" என்பது

ஒரு சிறிய, பெரிய, நடுத்தரமான

 நல்ல தத்துவம்.


ஆகவே

அதில் வருந்த ஒன்றுமில்லை.


நானும்

நீ வருவதற்கு முன்பிருந்த

நானிற்கே  போய் விடுகிறேன்


இந்த டேபிளை 

பழைய இடத்திலேயே  மாற்றி வையேன் 

 என் கண்மணி ?


சின்ன வேலைதானே...


நான் கூட

ஒரு கை பிடிக்கிறேன்


Comments

Anonymous said…
வரிகள் எளிதாகவும் கடத்தும் விசயம் கனமானதாகவும் இருக்கிறது.