Skip to main content

Posts

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நக...

மதுரா

                             ' உங்களுக்கு 4 கோடி கடன் வழங்க உத்தேசித்துள்ளோம்...   எப்போது பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் ?  '   என்று கேட்டது ஓர் அழைப்பு  ' இல்லை... வேண்டாம்... ' என்றேன். சில நாட்கள் கழித்து திரும்பவும் அழைப்பு ... 2 கோடி தரப் போகிறோம் ...  ' வேண்டாம் 'என்றேன். நேற்று மீண்டும் அழைத்து 50 லட்சம் அளிப்பதாகச் சொல்லியது அண்டசராசரங்களையும்  வழங்க வல்ல குரலது மறுத்த போதும் அளித்துக் கொண்டுதான் இருந்தாள் அவள் 6 கோடியே 50 இலட்சத்தை  மூட்டை தூக்கியேனும் அடைத்து விட வேண்டும்.         நன்றி : உயிர்மை ஆகஸ்ட் - 18

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெரியும்

                           அது அழுக்கும் காற்றோட்டமற்றதுமான வகுப்பறை.அதன் பின்னால் மனோகரமான பள்ளத்தாக்குகள் இல்லை. அதை ஒட்டி ஓடைகள் சலசலப்பதில்லை. ஆனாலும் அதனுள்ளிருந்து ஒரு கிறங்கடிக்கும் நறுமணம் கசிந்து வரும். அது இதயத்தின் தசைநார்களை இன்பத்தின் வலியால் துடிதுடிக்கச் செய்யும்.வினோதம் என்னவெனில், இப்படி ஒரு அறை இருப்பதே முக்கால்வாசி மனித குலத்திற்குத் தெரியாது. சிலருக்கு தெரிந்திருந்த போதிலும் அவர்களது நாசிகளுக்கும்    அந்த நறுமணத்திற்குமிடையே ஊடுருவமுடியாத தடை இருந்தது.      என்ன வண்ணம்   ? என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாத, பொத்தானுக்குப் பதிலாக பின்னூசி குத்தப்பட்ட   சட்டையும், பொத்தல்களால் “ தபால் பெட்டி “ என்று கேலி செய்யப்பட்ட   டவுசரும் அணிந்திருந்த எங்களால் அந்த நறுமணத்தை உணர முடிந்தது. நாங்கள் பரவசம் கொப்பளிக்க வகுப்பறைக்குள் நுழைய முற்பட்டோம். அப்போது கருணையற்ற கண்களை தடித்த கண்ணாடியால் மூடியிருந்த , கடுத்த முகமும் , கொண்டைப் பிரம்பும் கொண்ட ஒ...

சொப்ன சஞ்சாரம்

                                                                            இணையம் கணினிக்குள் புகுந்து உலகை கோலோச்சியதற்கு முந்தைய பருவம் ... அவன் இளமை “ டும்” என்ற சத்தத்துடன் வெடித்துத் திறந்து சில வருடங்கள் ஆகியிருந்தன. காமத்தின் கடுவளிக்கு எதிர்நிற்க மாட்டாது தள்ளாடிக் கொண்டிருந்தான். அவன் தினவிற்கு கையளவிளல்ல, கவளங்களில் வேண்டியிருந்தது. ஆனாலும் அவன் பட்டினியால் வாடிக் கொண்டிருந்தான். அவனுக்குச் சொந்த வீடில்லை. நிரந்தர வேலையில்லை. எந்த வங்கியிலும் கணக்கில்லை. ஆனால் அவன் உடல் இதை எதையும் பொருட்படுத்தவில்லை.       எதிர்காலம் குறித்த பயங்கரமான கற்பனைகளிலிருந்து அவனைத் தடுத்தாட்கொண்டனர் சிலர். அவர்கள் முந்தானையைச் சரிய விடும் வேளையில் அவனுக்குக் கவலைகள் என்று இந்த உலகத்தில் ஒன்றுமே இருக்கவில்லை.ஏனெனில் இப்படி ஒரு உலகமே அக்கணங்களில் இருக்கவில்லை. பரவசத்தின் புதிர்நிரம்பிய பழ...

அழும் அறைகளைச் சமைத்தல்

                                                                   என்னை  மாற்றிய எழுத்து  (ஒரு மணி   நேரம் முன்பு- சிறுகதை-  அ.முத்துலிங்கம்-  காலச்சுவடு ஜூன் - 2017 இதழ் ) இந்தக் கதையில் முத்துலிங்கம் கதைகளின் பிரதான அம்சமான பகடி மொழி ஒரு எழுத்தாகிலும், எழுத்தின் உறுப்பாகிலும் இல்லை.கத்தரித்து  வைக்கப்பட்ட, செய்யுள் போன்றதான சின்ன சின்ன வரிகளால் யாக்கப்பட்ட கதையிது. மானுட வாழ்வின் அரிய பக்கம் என்கிற பாராட்டிற்கு ஏங்காத எளிய கதை. கொடும் வறுமையால் பீடிக்கப்பட்டிருக்கும் ஒரு குடும்பம்..அந்தத் தாய் தன் மகனை புதிய பள்ளியொன்றில் சேர்க்க முயன்று தோற்றுத் திரும்பவது கதை.கதை என்று எதையாவது சொல்ல வேண்டும் என்கிற கட்டாயத்திற்காக நான் விடும் கதையிது.   இந்த ஆகச் சுமாரான கதைக்குள் அந்த மனிதர் செய்திருக்கிற ஜாலங்கள்தான் நண்பனின் அலுவலகப் படிக்க...

ஊடுருவல்

              சோமனூர் பஸ்  ஸ்டாண்டில் கொய்யாப் பழம் விற்கும் சமூக விரோதியிடம் கிலோவுக்கு ஒன்று குறைவதாக சண்டையிட்டுக் கொண்டிருந்தான் நக்சல். தன் உடலெங்கும் அரியவகை மூலிகைகளால் ஆன தைல டப்பாக்களை தொங்க விட்டிருக்கும் தேசவிரோத  சக்தி நக்சலின் தோளைத் தொட்டு வத்திப்பெட்டி கடன் கேட்டான். பெட்டி இருந்தது ஆனால் அதில் குச்சி இல்லை. இருவருமாய்ச் சேர்ந்து கடப்பாரை, மண் வெட்டி சகிதம் 14 பி க்கு காத்திருக்கும் தீவிரவாதியை அணுகினர். அவன் தானும் தீயின்றித்தான் தவிப்பதாகச் சொன்னான்.  கழிப்பறை வாசலில்  அமர்ந்து கொண்டு " ஆச்சா... சீக்கிரம் வா..."     "ஆச்சா...சீக்கிரம் வா"  என்று கத்திக் கொண்டிருந்தான்  விஷமி அவனிடம் ஒரெயொரு குச்சி இருந்தது. அந்த உரிமையில் அவன் ஒரு பீடி  ஓசி கேட்டான். இப்படியாக ஒரு நக்சல், ஒரு தேச விரோத சக்தி,  ஒரு தீவிரவாதி, ஒரு விஷமி ஆகிய நால்வரும் ஒரேயொரு குச்சியில் 4 பீடிகளைக் கொளுத்திக் கொண்டனர். அப்போது இமயம் முதல் குமரி வரை எங்கெங்கும் பற்றியெரிந்தது.