Skip to main content

குட்டிச் செம்பொன்

சுவரைத் தாண்டாத தாழ்ந்த குரலில்
உருக்கொள்கிறது ஒரு சச்சரவு
அந்த வீட்டின் அம்மாவும் அப்பாவும் மாறி மாறி ஏசிக்கொள்கிறார்கள்
வஞ்சினம் சொல்கிறார்கள்
அப்பா காலைத் தூக்கிக்கொண்டு அம்மாவை உதைக்க போகிறார்
அம்மா ஒரு சொல்லை பழுக்ககாய்ச்சி அப்பாவின் நெஞ்சில் வைத்து தேய்கிறார்
அம்மா நெஞ்செங்கும் அழ, அப்பா கண்களுக்குள் அழுகிறார்
அப்பா கனவு கண்டிருந்த பொன்னான வாழ்விற்குள் அம்மா மூத்திரம் மொண்டு வைக்கிறாள்
அம்மா கனவு கண்டிருந்த பொன்னான வாழ்வை
அப்பா எண்ணெய்ச் சவுக்கால் ஓங்கி ஓங்கி அடிக்கிறார்
நமக்கு தெரியும்
இரண்டு வயதே நிரம்பிய ஒரு குழந்தைக்கு என்ன தெரியுமென்று
நான் பேசுவதெதுவும் அதற்கு புரியாது
அதனால் பேசவும் முடியாது
இரண்டு முகங்களையும் மாறி மாறி பார்க்கும் அது
ஐந்தாம் வீட்டின் சுவரை முட்டிக்கொண்டு அழுகிறது
பொன்னான வாழ்வில் பூத்த குட்டிச் செம்பொன்
அநியாயத்திற்கு வளர்ந்து விட்டது

Comments

வார்த்தைகளும், மூத்திரமும், வெப்பமும் இல்லாத கனவை கானும் அந்த குட்டிச்செம்பொன் துரதிஷ்டசாலி.. ஆனாலும் அதற்கு உலகம் முழுவதும் ரத்த உறவுகள்.

விஷ்ணுபுரம் சரவணன்
வார்த்தைகளும், மூத்திரமும், வெப்பமும் இல்லாத கனவை கானும் அந்த குட்டிச்செம்பொன் துரதிஷ்டசாலி.. ஆனாலும் அதற்கு உலகம் முழுவதும் ரத்த உறவுகள்.
rvelkannan said…
நல்லாயிருக்கு நண்பரே
//ஆனாலும் அதற்கு உலகம் முழுவதும் ரத்த உறவுகள்.//
உலகம் முழுவதும் செம்பொன்.

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.