ஒரு பைத்தியம்
கேரிபேக்கில் டீ
வாங்கிக் கொண்டு போவதைப் பார்த்தேன்
பைத்தியத்திற்கு
இன்னமும் டீ குடிக்க வேண்டியிருக்கிறது.
இந்த
இருபத்திநான்காம்தேதி இரவை
நான்
பைத்தியத்தின் டீ
என்பேன்.
தெய்வமே !
இந்த டீ
சூடாறாதிருக்கட்டும்..
சுவை
குன்றாதிருக்கட்டும்..
பருகப்பருக
பல்கிப்பெருகட்டும்..
Comments