Skip to main content

எனது களம்.. எனது ஆட்டம்.. நானே நாயகன்



புதிதாக ஒரு கொசுமட்டை  வாங்கியதிலிருந்து
நிம்மதியாக இருக்கிறேன்.
கொசு விரட்டிகள்
கொசுக்களை விரட்டி விடுகின்றன.
ஆனால் மட்டை அவைகளை கொன்று தீர்க்கிறது.
ஒரு கொசு பறந்து போக
நானும் பறந்து போய்
சரியான வாகில் வைத்து ஒரே சாத்து
இன்பம் என் உள்ளத்தில் பட்என்று தெறிக்கிறது.
பட்…  பட்…  பட்பட்பட்….”
  இந்தக் கொசுமட்டை சமயங்களில் ஒரு  கோடாரி
  ஈனப்பிறவிகள் என் காலடியில் கிடந்து
  "தயை”…  "தயை”.. என்று கதறும்.
  கதறலின் மண்டையில் ஓங்கி ஒரு போடு
 ” பட்..பட்..பட்பட்…. ”  “ பட்பட்..பட்
 பிஸ்டலுக்கு எண்ணெய் போடுவது போலே
மட்டையில் மின்சாரம் ஏற்றுகிறேன்.
என் வீட்டின் முன்னே
குளம் போல தண்ணீரைத் தேக்கி வைத்திருக்கிறேன்.
கொசுவீர் !
பிறந்து எழுந்து திரண்டு வருக !

                                     நன்றி ; காலச்சுவடு – பிப்ரவரி-2015
                


Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.