Skip to main content

அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவு





அவள் அழைத்த அப்பொழுது
ரயில்படிக்கட்டில் அமர்ந்திருந்தேன்.
வானத்தில் பூர்ணிமை பொங்கி வழிந்து கொண்டிருந்தது.
அப்பொழுது அதனுடன் மட்டுமே பேசத்தோன்றியது
ஆகவே ஃபோனை எடுக்கவில்லை.
திரும்பவும் வந்த அழைப்பை
வேறு உலகத்திலிருந்து வந்து விழும் கல் போல் உணர்ந்தேன்.
எனவே அதை துண்டித்துவிட்டேன்.

இன்னொரு நாள் அழைக்கையில் அலுவலகத்தில்
பழைய ஃபைலொன்றை தேடிக்கொண்டிருந்தேன்.
அவளை விடவும்
அப்படியொன்றும் முக்கியமான ஃபைலில்லை தான்.
ஆனாலும் எடுக்கவில்லை.


மூன்றாவது முறையாக அழைத்த போது
இரண்டு காரணங்களை சொல்ல வேண்டியிருந்ததால்
எடுக்கவில்லை.


நான்காவது முறைக்கு 3 காரணங்களையும்
ஐந்தாவது முறைக்கு 4 காரணங்களையும்
கண்டறிய வேண்டியிருந்தது.

அடுத்தடுத்த அழைப்புகளில்
பிரியம் பூதமென்றாகிவிட்டது.

விட்டுவிடவே கூடாத அன்புதான்
ஆனாலும் விட்டுவிட்டேன்.

எல்லாம் அந்த “ பூர்ணிமாவை சொல்ல வேண்டும்!

                           நன்றி : ஆனந்த விகடன்

Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.