Skip to main content

ரொமான்டிசம்


நாய் புழுதியில் புரள்வது போல
இந்த நாள் சோம்பலில் புரள்கிறது.
அவன் அவனை இழுத்துக் கொண்டு
அலுவலகம் போனான்.
அதே மெஸ் பையன்
அதே இட்லியை வைத்தான்
இதே இட்லியின் முகத்தில்
எத்தனை காலமாய் விழித்துக் கொண்டிருக்கிறோம்
என்கிற நினைப்பு குமட்டிக் கொண்டு வந்தது.
வேண்டுமானால் வேலையை விட்டு நீக்கிக் கொள்ளுங்கள்
எனும்படிக்கு
அதிகாரிகளுக்கு அரை வணக்கம் வைத்தான்.
இன்று புதிதாக நான்கு கோப்புகள் தேங்கிவிட்டன.
வாங்குவதற்கு ஒன்றுமில்லையாயினும் 
அவன் வாகனம் அவனை
ஒரு ஷாப்பிங் மாலிற்கு
அழைத்து சென்றது 
" நேராக நெஞ்சிற்குள் செல்லும் படியாக ஒரு பெர்ப்யூம் இல்லையா?"
என்று கேட்டான்.
சிப்பந்தி ஒரு கணம் திகைத்துப் போனான்.
மறுகணம்
ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டனர்.
இருவரும் கொஞ்சம் அழுதது போலவும் இருந்தது.

Comments

Popular posts from this blog

சுமார்

எ னக்கே தெரியும் , 'இசைக்கலைஞர்களை இசை பார்த்துக் கொள்ளும் ' என்பது ஒரு உணர்ச்சிகரமான உண்மைதான் ஆயினும் நேற்றொரு கிட்டார் கலைஞனிடம்  பேச்சுக் கொடுத்தேன் என் தோளில் கையூன்றி  இதழ்கடை விரித்தார்... "சுமாரா பாத்துக்கும் பாஸ்"

வாய்ஸ் மெசேஜ் பாவங்கள்

தூ ராதி தூரம் சென்றுவிட்டாய் நீ உன் குரல்களோ  என்னிடமே தங்கிவிட்டன. காலம்  பேச்சைப் பாட்டாக்க வல்லது அடீ ... !  அந்தப் பாடல்களை இனி கேட்கவே முடியாது. உபயோக்கிக்கவும் முடியாத தூக்கியெறியவும் முடியாத பொருட்களின் துருவோடு துருவானது நம் நேசம் லேசாக அழுத்திப் பிடித்தால் போதும் எல்லாவற்றையும்  அழித்து விடலாம் என்கிறது  நவயுகம்.  அவ்வளவு பலத்திற்கு நானெங்கு போவேனென மறுகி நிற்கிறது ஒரு பழைய உயிர்

‘இதயம் முரளி'யரின் காலாதிகாலம்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை இன்று வெளியாகியுள்ளது. ‘இதயம் முரளி'யரின் காலாதிகாலம்  வாசிப்பதற்கான இணைப்பு  https://akazhonline.com/?p=13791