வீட்டிலிருந்து
இதயங்களிலிருந்து அறிவிலிருந்து ஆலயங்களில் இருந்து போதைகளில் இருந்து பொருட்களிலிருந்து ஒளிந்து கொண்ட ஒவ்வொன்றிலிருந்தும் ஓட ஓட விரட்டப்பட்டேன் தண்டவாளத்தில் ஒளிந்து கொள்ள அவ்வளவு பயம். ஒரு கவி செம்பருத்தியின் குழலைக்காட்டி " இதற்குள் இரு" என்கிறான். இவ்வளவு பெரிய நான் இதற்குள் ஒடுங்க இயலுமா? ஆனால் இது புதிதாக இருக்கிறது. இனிதாக இருக்கிறது. ஒளிந்து கொண்டது போலவே ஆகிவிட்டது. |

Comments