ஊர்ந்து செல்லும் மோட்டர் சைக்கிளில் எதையோ விற்றுக்கொண்டு போகிறான் எவ்வளவு செவி கூர்ந்தாலும் என்ன என்பது விளங்கவில்லை என்ன விற்பது என்று தெரியாமல் எப்படி வாங்குவார்கள்? ஆரம்பத்தில் அவன் விற்கத்தான் செய்தான் ஏதோ ஒரு கணத்தில் சட்டென அவனொரு பாட்டில் ஏறி விட்டான் இதோ... பாடிக்கொண்டு போகிறான். பாட்டில் ஏறிய பிறகு அவன் எதையும் விற்பதில்லை யாரையும் அழைப்பதுமில்லை. |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments