Skip to main content

இன்று நாள் எப்படி?

 



சிறுபருக்கள் விளையாடும் முகத்தை டம்ளர் தண்ணீரில் கழுவி வாரிப் பின்னாத கலைந்த கேசத்தோடு வாய்க்குள் பிரஷ்சைச் செலுத்தி மேலும் கீழுமாய் வாசித்துக் கொண்டிருந்த ஒருத்தி பார்த்தும் பார்க்காமலும் பார்த்த லாவகத்தில் ஒரு சோகையான அழகிருந்தது இன்றைய நாள் இப்படி இருந்தால் போதும்.

Comments

Popular posts from this blog

நினைவோ ஒரு பறவை

  இ ந்தமுறை மருத்துவர்  கண்டிப்பாகவே சொல்லிவிட்டார்… “நீங்கள் கண்டதையும் போட்டுக்  குழப்பிக் கொள்ளக் கூடாது”  எனக்கு ஓரளவு புரிகிறது தேநீர் மட்டுமே இருக்கும் தேநீரைச் சொல்கிறார் ‘கடி' க்கு வேறொன்றும் கூடாதென்கிறார் சலனமற்ற குளத்தைத்தான் சொல்கிறார்  எனில், எனது  நான்கு கழுதைகளையும் எங்கு வைத்துக்  குளிப்பாட்ட? எனக்கு நன்றாகவே புரிகிறது சாமான்ய நிலையிலிருந்து என்னை  சாமாதி நிலைக்குத் தூக்குகிறார்  மறைஞானத்தை மாத்திரையாக்கப் பார்க்கும்  இந்த நாச்சிமுத்து ஒரு வேளை ‘ லாவோட்சு' வின் வம்சாவழியோ என்னவோ? “இப்போதுதானே சொன்னேன்…” என்றொரு குரல் உலுக்க விழித்தேன் பாருங்கள்,  அதுகூட அவர் அதட்டியதில்லை நான் அதட்டியதுதான்.

சிரம்தாழ்ந்த விண்ணப்பம் !

  கே ரட் கண்ணிற்கு மிக நல்லது இரு, இரு  பச்சையாக உண்பதே நல்லது முட்டை புரதச்சத்து மிக்கது இரு இரு  வெள்ளைக்கரு மட்டும்தான் நல்லது கீரை யுண்டால், பீடை யில்லை இரு, இரு முட்டையுடன் உண்டு தொலைக்காதே  ஆப்பிள் ஒரு  இரத்தக் காட்டாறு இரு, இரு உப்பிட்ட வெந்நீரில் நன்றாகக்  கழுவ வேண்டியது அவசியம் வானகமே, இளவெயிலே, மரச்செறிவே! இரு, இரு பால்காரன் வந்துவிட்டானா? ஆற்றுக்குளியல்  அருமையோ அருமை இரு, இரு கிடங்குகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது உடற்பயிற்சி மிக மிக முக்கியம் இரு, இரு அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தூங்காதே தம்பி, தூங்காதே! இரு, இரு எவ்வளவு உறக்கமோ, அவ்வளவு ‘விழிப்பு’ வெளி திறந்து கிடக்கிறது இரு, இரு ஃபீல் அட் ஹோம் பணத்தினைப் பெருக்கு இரு, இரு ரஸத்திலே தேர்ச்சி கொள் “நீ வாழ பிறரைக் கெடுக்காதே” இரு, இரு வலுத்ததே வாழும் பிறப்பு என்றிருந்தால் இறப்பு என்றிருக்கவே செய்யும் இரு, இரு சுமாராகவேனும் வாழ்ந்திருக்க வேண்டும் உன்னதங்களின் உன்னதம்  எதுவென்றுரைத்தால்  அது கவிதைதான் இரு, இரு கவிதையைப் பார்த்துக் கொண்டே  வாழ்கையை கோட்டை விட்டு விடக்கூடாது....

காதலைப் பாடாதிருப்பதன் கடினம்

காமம் வதைக்காத உயிர் எது? எவ்வளவு லட்சியங்களை, எவ்வளவு உன்னதங்களை காவு கொள்ளும் காளி அது? எத்தனை மகத்துவங்கள் அதன் முன் வாலைச்சுருட்டி கொண்டு மூலையில் அமர்ந்திருப்பதை நாம் பார்த்துவிட்டோம். சங்கக்கவித் திரட்டு முழுக்கவும் தலைவியரைப் பசலை படாத பாடு படுத்தியுள்ளது. பரணர் பசலைக்கு கிணற்றுப் பாசியை உவமை சொல்கிறார். ஊரார் உண்ணத் தொடும் போது அது விலகி நிற்கிறது. மறுகணமே திரண்டுவிடுகிறது. அது போல் தலைவன் தொடுந்தோறும் தொடுந்தோறும் விலகி , விடுந்தோறும் விடுந்தோறும் பாய்கிறதாம் பசலை. ஒரு புலி போலவா? ஆம்... கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை இன்றைய அகழ் மின்னிதழில் வெளியாகியுள்ளது. முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=13223 நன்றி அகழ்!