Skip to main content

காய்ச்சல் பாட்டு

 



காய்ச்சல் என்பது

கொஞ்சமாக மரணிப்பது

இல்லாது போவதின் ஆசுவாசம்


காய்ச்சல் என்பது

சின்ன ஞானம்

போதும் போதும் என்று

போர்வையைத் தவிர

யாவற்றையும் மறுப்பது


காய்ச்சல் வந்தவுடன்

அம்மா வந்துவிடுகிறாள்

இப்போது

நீ எங்கு தலை வைத்தாலும் 

அது

தாய்மடிதான்


அனத்துதல் என்பது காய்ச்சல் பாட்டு

அது காய்ச்சலைத் தாலாட்டுவது


தூரத்திலிருக்கும் இதயத்தை அழைக்க

ஆகச்சிறந்த பாட்டொன்று உண்டெனில்

அது காய்ச்சல் பாட்டுத்தான்.


Comments

balamurali47 said…
எங்க இசை அனதத விடுறாங்க வீட்ல. ஒரு காச்சலுக்கு ஏன் இப்படி அனத்துறீங்கன்னு திடடுதான் விழுது. அறுசுவை மட்டும் அல்ல அனத்தல் பாட்டும் அன்னையோடு போய்.
balamurali47 said…
எங்க இசை அனதத விடுறாங்க வீட்ல. ஒரு காச்சலுக்கு ஏன் இப்படி அனத்துறீங்கன்னு திடடுதான் விழுது. அறுசுவை மட்டும் அல்ல அனத்தல் பாட்டும் அன்னையோடு போம்

Popular posts from this blog

சுமார்

எ னக்கே தெரியும் , 'இசைக்கலைஞர்களை இசை பார்த்துக் கொள்ளும் ' என்பது ஒரு உணர்ச்சிகரமான உண்மைதான் ஆயினும் நேற்றொரு கிட்டார் கலைஞனிடம்  பேச்சுக் கொடுத்தேன் என் தோளில் கையூன்றி  இதழ்கடை விரித்தார்... "சுமாரா பாத்துக்கும் பாஸ்"

வாய்ஸ் மெசேஜ் பாவங்கள்

தூ ராதி தூரம் சென்றுவிட்டாய் நீ உன் குரல்களோ  என்னிடமே தங்கிவிட்டன. காலம்  பேச்சைப் பாட்டாக்க வல்லது அடீ ... !  அந்தப் பாடல்களை இனி கேட்கவே முடியாது. உபயோக்கிக்கவும் முடியாத தூக்கியெறியவும் முடியாத பொருட்களின் துருவோடு துருவானது நம் நேசம் லேசாக அழுத்திப் பிடித்தால் போதும் எல்லாவற்றையும்  அழித்து விடலாம் என்கிறது  நவயுகம்.  அவ்வளவு பலத்திற்கு நானெங்கு போவேனென மறுகி நிற்கிறது ஒரு பழைய உயிர்

‘இதயம் முரளி'யரின் காலாதிகாலம்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை இன்று வெளியாகியுள்ளது. ‘இதயம் முரளி'யரின் காலாதிகாலம்  வாசிப்பதற்கான இணைப்பு  https://akazhonline.com/?p=13791