Skip to main content

டீ டைமில் பிரார்த்திப்பவர்கள்

 



எனக்காக ஒருத்தி 

மண்டியிட்டுப் பிரார்த்திப்பதைப் பார்த்தேன்


நான் 

இதை நிறையக் கண்டவன்


எனக்குத் தெரியும்

நான் கண்மூடி அமர்ந்ததும்

தேவன் எழுந்து

டீ குடிக்கப் போய் விடுவார் என


பிரார்த்தனையின்

ஒரு தருணத்தில்

அவள் உருகி

சொட்டுச் சொட்டாய் 

தரையில் விழக் கண்டேன்


நான்

அவளுக்காய் பிரார்த்திக்கத் துவங்கினேன்.



Comments

radkrish said…
அருமை..

தேவன்
24/7 தேநீரகம்(மல்லு)
தேவலோகம்

Popular posts from this blog

வாய்ஸ் மெசேஜ் பாவங்கள்

தூ ராதி தூரம் சென்றுவிட்டாய் நீ உன் குரல்களோ  என்னிடமே தங்கிவிட்டன. காலம்  பேச்சைப் பாட்டாக்க வல்லது அடீ ... !  அந்தப் பாடல்களை இனி கேட்கவே முடியாது. உபயோக்கிக்கவும் முடியாத தூக்கியெறியவும் முடியாத பொருட்களின் துருவோடு துருவானது நம் நேசம் லேசாக அழுத்திப் பிடித்தால் போதும் எல்லாவற்றையும்  அழித்து விடலாம் என்கிறது  நவயுகம்.  அவ்வளவு பலத்திற்கு நானெங்கு போவேனென மறுகி நிற்கிறது ஒரு பழைய உயிர்

சுமார்

எ னக்கே தெரியும் , 'இசைக்கலைஞர்களை இசை பார்த்துக் கொள்ளும் ' என்பது ஒரு உணர்ச்சிகரமான உண்மைதான் ஆயினும் நேற்றொரு கிட்டார் கலைஞனிடம்  பேச்சுக் கொடுத்தேன் என் தோளில் கையூன்றி  இதழ்கடை விரித்தார்... "சுமாரா பாத்துக்கும் பாஸ்"

‘இதயம் முரளி'யரின் காலாதிகாலம்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை இன்று வெளியாகியுள்ளது. ‘இதயம் முரளி'யரின் காலாதிகாலம்  வாசிப்பதற்கான இணைப்பு  https://akazhonline.com/?p=13791