குழந்தைக்கு கன்னத்தைக் காட்டுவது போலே வெய்யிலுக்குக் காட்டிக் கொண்டு நிற்கிறாள் ஒருத்தி கிண்ணத்திலிருந்து சந்தனத்தை அள்ளுவது போல் வெய்யிலை அள்ளி மெல்ல மெல்ல மெழுகுகிறாள் வதனமெங்கும் ஊர்ந்து ஊர்ந்து கொஞ்சுகிறது கதிரொளி வேறொரு பனிக்குள்ளிருந்து வெளிவந்து முதல் வெய்யிலில் கரைந்து கொண்டிருக்கிறாள் |
Comments