Skip to main content

ஒரே ஒருத்தி



புதிதாக சைக்கிள் பழகும்

ஒரு சின்னஞ்சிறுமி

என்னைக்  கடைக் கண்ணால் நோட்டமிட்ட படியே

குட்டி சைக்கிளில் ரவுண்டு வருகிறாள்.


ஐந்தாவது  ரவுண்டாக

என் வாசலைக் கடக்கையில்

பிடிப்பது போல

அவள் குறுக்கே ஒடினேன்


ஒருத்தி சிக்கி விட்டாள்

ஒருத்தி தப்பி விட்டாள்.


Comments

வாவ்...அந்த ஒருத்தி எப்போதும் நினைவில் இருப்பாள் நிரந்தரமாக.
Thendral said…
அவள் சிரிப்பு என்னால் பார்க்க முடிகிறது உங்கள் வரிகளில்🙂

Popular posts from this blog

வாய்ஸ் மெசேஜ் பாவங்கள்

தூ ராதி தூரம் சென்றுவிட்டாய் நீ உன் குரல்களோ  என்னிடமே தங்கிவிட்டன. காலம்  பேச்சைப் பாட்டாக்க வல்லது அடீ ... !  அந்தப் பாடல்களை இனி கேட்கவே முடியாது. உபயோக்கிக்கவும் முடியாத தூக்கியெறியவும் முடியாத பொருட்களின் துருவோடு துருவானது நம் நேசம் லேசாக அழுத்திப் பிடித்தால் போதும் எல்லாவற்றையும்  அழித்து விடலாம் என்கிறது  நவயுகம்.  அவ்வளவு பலத்திற்கு நானெங்கு போவேனென மறுகி நிற்கிறது ஒரு பழைய உயிர்

சுமார்

எ னக்கே தெரியும் , 'இசைக்கலைஞர்களை இசை பார்த்துக் கொள்ளும் ' என்பது ஒரு உணர்ச்சிகரமான உண்மைதான் ஆயினும் நேற்றொரு கிட்டார் கலைஞனிடம்  பேச்சுக் கொடுத்தேன் என் தோளில் கையூன்றி  இதழ்கடை விரித்தார்... "சுமாரா பாத்துக்கும் பாஸ்"

‘இதயம் முரளி'யரின் காலாதிகாலம்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை இன்று வெளியாகியுள்ளது. ‘இதயம் முரளி'யரின் காலாதிகாலம்  வாசிப்பதற்கான இணைப்பு  https://akazhonline.com/?p=13791