நண்பனின் புதிய அறைக்குப் போயிருந்தேன் பால்கனியில் நின்று பார்த்தால் தூரத்தில் நீலக்கடல் புகைப்பழக்கம் இல்லை ஆயினும் படிகளில் இறங்கி ஓடினேன் இப்போது நான் என்னை ஏந்திக் கொண்டு நிற்கிறேன் விரலிடையில் மெல்ல மெல்ல ஆவியாகிறேன் சிகரெட் சாலையைக் கடந்து கட்டிடங்களைக் கடந்து கரையைக் கடந்து கடலைப் போய்த் தொடுகிறது கடலைத் தொடும் நெருப்பு ஈரத்தால் அணைவதில்லை என் சிகரெட் மிதந்து மிதந்து இருண்ட ஆழங்களுக்குள் நுழைகிறது இருண்ட ஆழங்களில் அதிக வெளிச்சம். அலைச் சருக்கில் ஒரு புதுத் துரும்பின் கொண்டாட்டம் வெறுங்கையில் கடல் தெரியாதா என்ன? அது எனக்குத் தெரியாது. கடல் முன் ஒரு முறை புகைந்தாக வேண்டும் அது எனக்குத் தெரியும் |
Comments