நான் போகட்டுமென்று அவர் நின்று கொண்டிருக்கிறார் அவர் போகட்டுமென்று நான் நின்று கொண்டிருக்கிறேன் நான்தான் போக வேண்டுமென்று அவர் சிரித்துக் கொண்டு நிற்கிறார். அவரே போகட்டுமென்று நான் அடம்பிடிக்கிறேன் இந்தப் பத்து நொடித் தாமதத்தை பையில் போட்டு அலுவலகத்திற்கு எடுத்துப் போனேன். அம்மா கொடுத்தனுப்பிய குளோப் ஜாமூன் மறைந்து போய்விட்டதோவென டிபன் பாக்ஸை திறந்து திறந்து மூடுகிறான் ஒரு சிறுவன். |
Comments