Skip to main content

டெஸ்கில் தாளமிடும் பையன்கள்

 




உங்களுக்கு  டெஸ்கில் தாளமிடும் 

அந்தப்  பையனை 

நினைவிருக்கிறதா?


அவன்

ஒவ்வொரு வகுப்பிலும் உண்டு

பெரும்பாலும் 

கடைசி பெஞ்சில்  ஒளிந்து கொண்டு


டெஸ்கில்  தாளமிடும் பையன்

என்றொருவன்  இருந்தால்

அவனுக்குக்  காதலி

என்றொருத்தி கட்டாயம் இருப்பாள்


மதிப்பெண் அட்டை வழங்கப்படும் நாட்களில்

எல்லா மதிப்பெண்களையும்

ஒன்றாக்க வேண்டி

அவர்கள்

கட்டாயம்  இசைப்பார்கள்


டெஸ்கில் தாளமிடும் பையன்கள்

டிரம்ஸ்சைத்  தொடாமல்

பறையைத் தொடாமல்

தாளத்தைத் தொட்டார்கள்


பிறகு


அவர்கள்

தாளத்திலிருந்து எழுந்து


கல்லூரிக்குப் போனார்கள்


அலுவலகம் போனார்கள்


வீட்டுக்குப் போனார்கள்

ஸமத்துக்குப்  போனார்கள்


தந்தைக்குப் போனார்கள்


டெஸ்கில் தாளமிட்ட பையன்கள்

டெஸ்கில் தாளமிடும் பையன்களைக் காண்கிறார்கள்

ஒரு நினைவும்  இல்லாமல்


Comments

Popular posts from this blog

சுமார்

எ னக்கே தெரியும் , 'இசைக்கலைஞர்களை இசை பார்த்துக் கொள்ளும் ' என்பது ஒரு உணர்ச்சிகரமான உண்மைதான் ஆயினும் நேற்றொரு கிட்டார் கலைஞனிடம்  பேச்சுக் கொடுத்தேன் என் தோளில் கையூன்றி  இதழ்கடை விரித்தார்... "சுமாரா பாத்துக்கும் பாஸ்"

வாய்ஸ் மெசேஜ் பாவங்கள்

தூ ராதி தூரம் சென்றுவிட்டாய் நீ உன் குரல்களோ  என்னிடமே தங்கிவிட்டன. காலம்  பேச்சைப் பாட்டாக்க வல்லது அடீ ... !  அந்தப் பாடல்களை இனி கேட்கவே முடியாது. உபயோக்கிக்கவும் முடியாத தூக்கியெறியவும் முடியாத பொருட்களின் துருவோடு துருவானது நம் நேசம் லேசாக அழுத்திப் பிடித்தால் போதும் எல்லாவற்றையும்  அழித்து விடலாம் என்கிறது  நவயுகம்.  அவ்வளவு பலத்திற்கு நானெங்கு போவேனென மறுகி நிற்கிறது ஒரு பழைய உயிர்

‘இதயம் முரளி'யரின் காலாதிகாலம்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை இன்று வெளியாகியுள்ளது. ‘இதயம் முரளி'யரின் காலாதிகாலம்  வாசிப்பதற்கான இணைப்பு  https://akazhonline.com/?p=13791