ஆக உச்சியிலிருந்து பாதாளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஒரு லாரி ஊர்ந்து செல்கிறது சத்தம் நீக்கப்பட்ட லாரி இருவர் அநேகமாக ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டு செல்கின்றனர் அன்பா..? சண்டையா..? சாதாரணமா..? அறியமுடியவில்லை லாரி பொம்மை கார் பொம்மை ஆண் பொம்மை பெண் பொம்மை வீட்டு பொம்மை கடை பொம்மை பொம்மை.. பொம்மை.. பொம்மை.. இரத்தமில்லை காயமுமில்லை. |
பெருந்திரள் கூட்டத்தில் தன் பிள்ளையின் சுண்டுவிரலை நைசாகக் கழற்றிவிட்டுவிட்டு விறுவிறு வென நடந்து மறைந்துவிடும் அன்னையர் சிலர் உண்டு அவர்களை நாம் அறிவோம் அந்தக் குழந்தையின் விழிகள் பிதுங்கி வாய் கோணுவதை ஒளிந்திருந்து நோக்கும் அன்னை ஒருத்தியும் உண்டு சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்! நம்ப விரும்ப மாட்டீர்!

Comments