பாடகர் பாடுகிறார் பாடிக் கொண்டிருக்கிறார் பாடிக் கொண்டிருக்கிறார் பாடகர் ‘பாடத்’ துவங்கும் தருணம் என்றொன்றுண்டு பாடகர் ‘பாடத் ‘ துவங்கி விட்டார் “ ஓ..” என்றெழுந்ததொரு வாத்தியம் “ம்” என்றொரு வாத்தியம் “ஆஹா..” என்று எங்கோ துள்ளியதொரு வாத்தியம் “ ச்….” கொட்டி மறைந்ததொரு வாத்தியம் “வாவ்..” வாய் திறந்து கூச்செரியும் வாத்தியங்கள் ஆங்காங்கு தாயைத் திட்டி ஒரு கெட்ட வாத்தியம் பிளாஸ்டிக் சேர் வாத்தியங்கள் செருப்புக் கால் வாத்தியங்கள் நெஞ்சத்து ஆனந்தம்…. அது ஒரு நிகரற்ற வாத்தியம் வாத்தியங்கள் கூடிக் கூடிப் பெருகியதில் மேடை கொள்ளவில்லை இதோ.. இந்த மேடை சமத்தில் சரிவதைக் காண்கிறேன் மேடை, அரங்கு என்று இரு வேறில்லை இப்போது |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments