மருந்துக்கடை கவுண்டரில் நின்று கொண்டிருந்தாள் ஒருத்தி உள்ளே பெட்டி பெட்டியாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அவற்றிற்கும் உனக்கும் என்னடி சம்பந்தம்! இந்த வீதிக்கும் உனக்குமே கூட இந்த ஊருக்கும் உனக்குமே கூட இந்த நகருக்கும் உனக்குமே கூட என்னடி சம்பந்தம்! அய்யோ.... உன்னைக் கொண்டு போய் எங்கடீ நிறுத்துவேன்! எங்குதான் ... எங்குதான்... நிறுத்துவேன் ! ஆம்... அப்படித்தான்.. மிகமிகச் சரிதான்.. நீ அங்கேயே நில் அரு மருந்தே! தனி மருந்தே! |
Comments