Skip to main content

பைத்தியங்கள்




னக்கென்ன பைத்தியமா….?


அவள் கத்திக் கொண்டிருக்கிறாள்

அவன் தலைகுனிந்து நிற்கிறான்


பிறகவன்

தன் கண்களை எடுத்து

அவள் முகத்தில் விட்டான்

தன் காதுகளைக் கிள்ளி

அவளுக்குச் சூட்டினான்

தன் நெஞ்சத்தை 

அவளுள் துடிக்க விட்டான்


கண்கள்

அவை

கொழுத்த ஆசையை

இரண்டு துண்டாய்

உருட்டிய உருண்டைகள்


செவிகள்

அவை

புறத்திற்கொன்றெனப்  படுத்திருக்கும்

இரண்டு வேட்டை   நாய்கள்


நெஞ்சம்

அதில்

கொசுத்திரள் கொடுக்கின்

கும்மாளக் கூச்சல்


உனக்கென்ன பைத்தியமா…?


அவன் கத்திக் கொண்டிருக்கிறான்

அவள் தலைகுனிந்து நிற்கிறாள்.

Comments

Thendral said…
பேரன்பு🥁