Skip to main content

Posts

மூன்று கவிதைகள்

                                                                                     1. காவியம்   இந்த அதிகாலை எப்படி மின்னியது தெரியுமா?   சொறி முற்றிய நாயொன்றின் பின்னங்கால்களில்  லாரி ஏறிவிட்டது.  அதன் வீறிடல் எல்லோர் மனங்களிலும் அதிர,  கல்லூரி மாணவி ஒருத்தி   எஞ்சிய காலிரண்டைப் பற்றி  அலேக்காக தூக்கி ஓரத்தில் கிடத்தி விட்டாள். " குழந்தையிலிருந்தே அவள் வீட்டில் நாய்கள் உண்டு"   காவியத்திலிருந்து அவளை விலக்கி வைத்தார் நண்பர்    “ நாயென்றாலே நான்கு தெருக்கள் தள்ளி நடப்பவள் “ என்று       நானவளை காவியத்துள் அமுக்கிப் போட்டேன்.                                      ...

கவிதையின் விளையாட்டு - “ பழைய யானைக்கடை” நூலின் என்னுரை

                             சங்கத்திலிருந்து   சமகாலம் வரை கவிதைக்குள் “ விளையாட்டு ”   எப்படி இயங்கி வந்திருக்கிறது என்றறிந்து   கொள்ளும் விருப்பத்தில்    விளைந்ததே இந்நூல் . மொழிக்குள் ” விளையாட்டு ” என்பது எது ? அது அங்கு எவ்விதம் தொழில்படுகிறது?   எந்த அளவில் விளையாட வேண்டும்?  என்பவை கொஞ்சம் சிக்கலான கேள்விகள். நகைச்சுவை, பகடி, சுவாரஸ்யம், வினோதம் இவற்றுடன் ” பரிட்சார்த்தமுயற்சி ” என்கிற ஒன்றையும் சேர்த்து, நான்  “ விளையாட்டு ” என்று புரிந்து கொள்கிறேன். இவற்றில் சுவாரஸ்யம், வினோதம், பரிட்சார்த்த முயற்சி ஆகியவற்றுடன் கொஞ்சம் “ துடுக்குத்தனமும் ” சேர்ந்திருக்க வேண்டியது அவசியம்.  “ இரசம் ” ” மனத்துக்குத் தக்க மாறும் என் பதே அறிஞர் கூற்று. நான் விளையாட்டு என்று கொள்வது உங்களுக்கு அப்படி தோன்றாமல் இருக்கவும் வாய்ப்புண்டு.    இது ஓரு முழுமையான ஆய்வுநூல் அல்ல. இப்பொருளைத் தீர...

இரண்டு வழிகள்

பொதுவழியும் சிறப்பு வழியும் ஒன்றாகும் இடத்தில் என்னய்யா இரைச்சல்? பொது வழியும் சிறப்பு வழியும் ஒன்றாவதால் எழும் இரைச்சல்.      நன்றி : உயிர்மை- நவம்பர்-17

டி.வி-யைப் போடு !

                                                                                                                            நிசப்தம் ஒரு நச்சரவம் அதன் நீலம் உந்தன்  மூளையைத் தீண்டும் முன் டி.வி-யைப் போடு! கொட்டும் அருவியும் ஒழுகும் சுனையும் வெக்கை அறையைச் சற்றே ஆற்றலாம் டி.வி-யைப் போடு! எப்போது திறந்தாலும் செய்திகள் ஓடும். விடிய விடிய ஜோக்குகள் வெடிக்கும் இரண்டில் ஒன்றைப் பார்த்துச் சிரிக்கலாம் டி.வியைப் போடு! உயிர்நடுக்கும் கோர விபத்துகள் அடிக்கடி காட்டும் கடவுளின் கருணையால் நீ அதிலில்லை டி.வி-யைப் போடு! முதலையின் வாயிலொரு வரிக்குதிரை... உனக்கு அந்தக் குதிரையைத் தெரியாது முதலையையும் தெரியாது டி.வி- யைப் போடு ! காமுகியொருத்தி  தன் பரந்த முது...

இந்தவாழ்வு சாஸ்தா டீ ஸ்டாலைப் போல் சிக்கலானது

இந்த ரம்யமான அதிகாலையில் மாமதுரத் தேநீர் வாய்த்துவிட்டது இரண்டு மொடக்கு மொடக்கிவிட்டு கீழே வைத்தேன் தினத்தந்தியில்  விருச்சிக ராசிக்கு என்ன பலனென்று தேடிப்பார்த்துவிட்டுத் திரும்பினால் இப்போது  டேபிளில் இரண்டு டம்ளர்கள் பக்கத்துச் சீட்டிலும் யாருமில்லை சம அளவுள்ள தேநீருடன் என்னை நோக்கிச் சிரிக்கும் இந்த இரண்டு டம்ளர்களில் எந்த டம்ளர் எனது டம்ளர்  ?                                                                                                                       விகடன் - தீபாவளி மலர் 

முக்கால் நிமிஷம்

நள்ளிரவு 2:00 மணிவாக்கில் உன் புகைப்படத்தை என் Dp- யாக வைத்தேன் பெருந்திணை அன்பின் புறநடையென்பதால் உடனே அஞ்சி அகற்றி விட்டேன். ஒரு முக்கால் நிமிஷம் நீ என் உரிமையில் இருந்தாய். அதற்குள் யாரேனும் பார்த்திருப்பார்களா? நடுசாமத்தில் யார் பார்க்கப் போகிறார்கள்? ஆனாலும் யாரேனும் பார்க்கத்தானே வைத்தேன். ஒருவர்  கூடவா பார்த்திருக்க மாட்டார்கள்? நல்லவேளை நீ குளோசப்பில் சிரிக்கவில்லை எனவே,எந்தக் கண்ணிலும் விழுந்திருக்காது ஒரு கண்ணிலுமா விழுந்திருக்காது?           நன்றி: உயிர்மை- ஜூலை-2017

ஆயிரம் ஸ்தோத்ரம்

                                                           காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில் மொத்தம் 9 குறுக்குச்சந்துகள் உள்ளன அதில் மூன்றாவது சந்தில் கனவுகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத ஒரு மகள் பள்ளிச்சீருடையில் நாணிக்கோணிக் காதலித்துக் கொண்டிருக்கிறாள் அதன் ஐந்தாவது சந்தில் 19 வயதில் இல்லறத்துள் உதைத்துத் தள்ளப்பட்ட அவள் அன்னை விட்டதைப் பிடிக்கும் முனைப்புடன் தீவிரமாக காதலித்துக் கொண்டிருக்கிறாள் . முதல் சந்தில் அமர்ந்திருக்கிறார் ஒரு அரசமரத்தடி பிள்ளையார். அவர்தான் அந்த ஒன்பது சந்துக்களையும் இழுத்துப் பிடித்துக் காவல் செய்கிறார். வாயிலிருந்து விசிலை இறக்காமல் ஓடியாடி பணியாற்றுகிறார். ஒரு கண்டிப்பான போக்குவரத்துக் காவலரைப் போல அந்தந்த சந்திற்கான வாகனங்களை மிகச் சரியாக அதனதன் வழியில் விடுகிறார். “privacy “  என்கிற சொல்லால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிற இருவரும் ஒருவர் போன...