Skip to main content

குடும்ப நாய் ; சில சித்திரங்கள்

1. ஒரு குடும்ப நாய்
குடும்பத்தைத் தின்று
குடும்பத்தை பேண்டு
அதையே தின்று
அதையே பேழ்வது.







2. உண்மையில் குடும்பநாய்களுக்கு
சங்கிலியோ கயிரோ தேவையில்லை.

3 . குடும்ப நாய்களை நாம் பரிசோதிக்க வேண்டியதில்லை.
அவை சிச்சயம் நல்ல சாதி நாய்கள்


4 உலைத்து உலைத்து ஓடாய் தேய்பவை
குடும்ப நாய்கள்.
பெரும்பாலும் அதன் உலைப்பு காற்றில் போய்விடுகிறது.

5. குடும்ப நாய்கள்
சமயங்களில்
திருட்டு பூனைகள்.

6. குடும்ப நாய்களுக்கு
விசாலமான வீடுகள் உண்டு.
என்றாலும்
அவை அசுத்தமான விடுதிகளிலேயே
சுத்தமான காற்று கிடைப்பதாக சொல்கின்றன.
எனவே சில நேரங்களில்
சொந்த ஊரிலேயே அறை எடுத்து தங்குகின்றன.

7. குடும்ப நாய்களிலும்
பெட்டைகள் இன்னும் பாவம்
அவை பாத்ரூம்களில்
மட்டும் நடனமாட அனுமதிக்க பட்டவை

8. குடும்ப நாயின் கர்ப்பக்குட்டிகளின்
வயிற்றில் வளர்ந்து வருகிறது
சலாமிடுதல் என்கிற பட்டறிவு.



9. குடும்ப நாய்கள் ரொம்பவும் மனசாட்சிக்கு பயந்தவை.
எனவே
எல்லா அநீதிகளுக்கெதிராகவும்
அவை இரண்டு முறை குரைத்து விடுகின்றன.



10. ஒரு குடும்ப நாய்
தன் வாழ்வில் ஒரு முறையேனும்
தண்டவாளத்தை உற்றுப் பார்க்கிறது.


11 . சில குடும்ப நாய்கள்
உத்தரத்தில் தொங்கி
கவரி மான்கள் ஆகின்றன

Comments

சிரிக்காமல் படிக்கமுடிந்தால், அது சாதனைதான்.கலக்கல் நண்பா.
இப்படிக்கு
-ஒரு குடும்ப நாய்
துல்லியமான கண்ணாடி போல இந்த கவிதை.ஒரு குடும்பத்தின் அத்தனை சுவர்களையும் அதன் கீறல்களோடும், சதுர திரும்பல்களோடும் அப்பட்டமாகப் பார்க்க முடிந்தது. கூடவே முகத்தையும். இவ்வளவு உண்மையான கவிதையாவென விதிர்விதிர்ப்பாகவும் இருந்தது.எழுத்தின் வன்மைக்குப் பாராட்டுக்கள்.

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685