மார்கழிப்பனியில்
காதடைத்த பஞ்சோடு
அதிகாலை
ஐந்துமணிக்கெல்லாம்
மைதானங்களில்
ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு
ஃபிட்னஸ் கிறுக்கு பிடித்திருக்கிறது
அதே
சிற்றஞ்
சிறுகாலையில்
மதுவிடுதியின்
கதவுகளை ஓங்கி ஓங்கி தட்டுகிறான் ஒருவன்
அவனைத் தான் நாம்
குடிக்கிறுக்கென்கிறோம்
உருளைக்கிழங்கு
போண்டாவை மணமுடித்து
அதனூடே 72 ஆண்டுகள்
வாழ்ந்து மறைந்ததொரு கிறுக்கு
சிங்கத்தின் வாயில் தலையைத் தந்துவிட்டு
கர்த்தரை நோக்கி கூவுகிறதொரு கிறுக்கு
இன்று நெஞ்சைப்பிடித்த படி
பஸ்ஸிற்கு ஓடுகிறார்
கல்யாணசுந்தரம்
அவருக்கு கார்குழல்
துவங்கி கால்நகம் முடியவும் கிறுக்கான கிறுக்கு
இசைக்கிறுக்கில்
வகைக்கொரு கிறுக்கு..
வாத்தியத்திற்கொரு
கிறுக்கு..
கிறுக்குகள் தம்
கிறுக்குத்தனத்தின் அச்சில்
ஜம்மென்று
அமர்ந்திருக்க
அதிலொரு கிறுக்கு
நேற்று உத்தரத்தில் தொற்றி விண்ணுலகு போனதேன்?
போகும் முன் தன் ப்யானோவை நூறு சுக்காக்கியதேன்?
போகும் முன் தன் ப்யானோவை நூறு சுக்காக்கியதேன்?
Comments