ஒரு முத்தம்
கொடுத்தவுடன் தீர்ந்து விட வேண்டும்
கொஞ்சம் எச்சிலில் கரைந்து விட வேண்டும்.
அதுவன்றி
காவிய டப்பாவிற்குள் ஒளித்து வைத்து
காலமெல்லாம் எடுத்து எடுத்துப் பார்க்கும் அந்த முத்தம்....
அது நமக்கு வேண்டாம் அன்பே
எ னக்கே தெரியும் , 'இசைக்கலைஞர்களை இசை பார்த்துக் கொள்ளும் ' என்பது ஒரு உணர்ச்சிகரமான உண்மைதான் ஆயினும் நேற்றொரு கிட்டார் கலைஞனிடம் பேச்சுக் கொடுத்தேன் என் தோளில் கையூன்றி இதழ்கடை விரித்தார்... "சுமாரா பாத்துக்கும் பாஸ்"
தூ ராதி தூரம் சென்றுவிட்டாய் நீ உன் குரல்களோ என்னிடமே தங்கிவிட்டன. காலம் பேச்சைப் பாட்டாக்க வல்லது அடீ ... ! அந்தப் பாடல்களை இனி கேட்கவே முடியாது. உபயோக்கிக்கவும் முடியாத தூக்கியெறியவும் முடியாத பொருட்களின் துருவோடு துருவானது நம் நேசம் லேசாக அழுத்திப் பிடித்தால் போதும் எல்லாவற்றையும் அழித்து விடலாம் என்கிறது நவயுகம். அவ்வளவு பலத்திற்கு நானெங்கு போவேனென மறுகி நிற்கிறது ஒரு பழைய உயிர்
Comments