நமது மாலை நேரத் தேநீர்களின் தலையில் இடி விழுந்துவிட்டது. அது ஒரு நாளின் அழகான நிறுத்தம் வீடொடுங்கும் முன்னே உலகத்தை ஒரு முறை சுற்றி வருவது சமயங்களில் அது ஓய்வின் இனிமை ஒரு தடகளவீரன் தனது நெடிய பயிற்சிகளின் முடிவில் ஊற்றெடுத்து வரும் வியர்வைப் பெருக்கை வழித்தெறிந்து சிரிக்கும் சிரிப்பு வானத்தின் ஜாலங்களைப் பார்த்தபடியே டம்ளரில் வாய்வைத்து அந்தியை உறிஞ்சுவேன். அந்தியை உண்டவன் அவ்வளவு சீக்கிரம் இருண்டு விடுவதில்லை. வானத்தின் கீழ் செய்யப்படும் எந்தவொரு காரியத்திலும் வானமும் கொஞ்சம் கலந்துவிடுகிறது. வீடுகளில் தரமான முறையில் தயாரிக்கப்படும் சுவைமிகு தேநீரில் வானம் இருப்பதில்லை. |
Comments