என் மூன்றாவது காதலி ஆத்திரமும் அழுகையும் பொங்க முகத்துக்கு நேரே விரல் நீட்டிக் கேட்டாள்... "உண்மையாகவே நீ என்னை நேசித்தாயா?" உண்மையைச் சொல்ல சிந்திக்க வேண்டியதில்லை. மறுகணமே சொன்னேன் "அன்னை மீது ஆணையாக அவ்வளவு நேசித்தேன்!" "பிறகெப்படி ஒன்பதாவதுக்குப் போனாய்?" "நேசித்துக் கொண்டேதான் அன்பே!" |
Comments