எல்லா ஊரிலும் உண்டு ஒரு வழிகாட்டி பயணிகள் பலரையும் உரிய வழிகளில் ஆற்றுப்படுத்தியபடி முன்பு அவனும் ஒரு பயணிதான் புழுதி மறைக்கும் புரவியேறி வந்தவன் எந்த வழி தன் வழியென்றறியாது குழம்பித் தவித்து பதறித் துடித்து தாரை தாரையாய் கண்ணீர் உகுத்து அந்தோ...! நான்கு முனைச் சந்திப்பொன்றில் பலகையாய்ச் சமைந்துவிட்டான். |
Comments