ஏரியைக் கடக்கும்போது அந்தியில் மனமழிந்து வண்டியை நிறுத்தாதே பார்த்துக்கொண்டே கடந்து போ ஏரி உன்னுள் பாய அரைநொடி போதும் "ஒருகை பார்க்கிறேன்" என்று அதன்முன் சம்மணமிட்டு அமராதே நமக்குத் தெரியாதா என்ன? யுகயுகமாக நம் கண்கள் எவ்வளவு பெரிய கொள்ளிக் கண்கள். பார்த்துப் பார்த்து அதை துண்டு துண்டாய் உடைக்காதே வாயை அகலப்பிளந்து மொத்தமாய் விழுங்கிவிடத் துடிக்காதே உன் நினைவில் ததும்பட்டும் அது வீட்டிற்கு அழைத்துப் போ ஏரியை. |
கே ரட் கண்ணிற்கு மிக நல்லது இரு, இரு பச்சையாக உண்பதே நல்லது முட்டை புரதச்சத்து மிக்கது இரு இரு வெள்ளைக்கரு மட்டும்தான் நல்லது கீரை யுண்டால், பீடை யில்லை இரு, இரு முட்டையுடன் உண்டு தொலைக்காதே ஆப்பிள் ஒரு இரத்தக் காட்டாறு இரு, இரு உப்பிட்ட வெந்நீரில் நன்றாகக் கழுவ வேண்டியது அவசியம் வானகமே, இளவெயிலே, மரச்செறிவே! இரு, இரு பால்காரன் வந்துவிட்டானா? ஆற்றுக்குளியல் அருமையோ அருமை இரு, இரு கிடங்குகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது உடற்பயிற்சி மிக மிக முக்கியம் இரு, இரு அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தூங்காதே தம்பி, தூங்காதே! இரு, இரு எவ்வளவு உறக்கமோ, அவ்வளவு ‘விழிப்பு’ வெளி திறந்து கிடக்கிறது இரு, இரு ஃபீல் அட் ஹோம் பணத்தினைப் பெருக்கு இரு, இரு ரஸத்திலே தேர்ச்சி கொள் “நீ வாழ பிறரைக் கெடுக்காதே” இரு, இரு வலுத்ததே வாழும் பிறப்பு என்றிருந்தால் இறப்பு என்றிருக்கவே செய்யும் இரு, இரு சுமாராகவேனும் வாழ்ந்திருக்க வேண்டும் உன்னதங்களின் உன்னதம் எதுவென்றுரைத்தால் அது கவிதைதான் இரு, இரு கவிதையைப் பார்த்துக் கொண்டே வாழ்கையை கோட்டை விட்டு விடக்கூடாது....

Comments