"இன்னொன்று...?" என்று கேட்டது நா. நான் அதை அதட்டவில்லை. அன்பு கொண்டு ஒரு முறை ஆழ்ந்து நோக்கினேன். ஏனோ பிறகு அது அனத்தவில்லை. இன்னொன்று இல்லாத காலி வயிற்றில் நிறைந்திருக்கும் அந்த ஒன்றை நாளெல்லாம் தடவித்தடவிக் களித்தேன். மடியில் எடுத்து வைத்துக் கொஞ்சினேன். |
Comments