Skip to main content

நடனத்தை நடனத்திற்காக ஆட வேண்டும் என்றார் ஒருவர்

 



குரங்கினத்திலொரு குரங்கு

முதன்முறையாக

ஒரு கனியிலிருந்து

இன்னொரு கனிக்குத் தாவாமல்

ஒரு கிளையிலிருந்து

இன்னொரு கிளைக்குத் தாவியது.


மனித இனத்திலொரு மனிதன்

முதன்முறையாக

கிழங்கைத் தோண்ட ஓடாமல்

நிலவை நோக்கி நடந்தான்.


பல யுகாந்தரங்களுக்குப் பிறகு

தோன்றியது

ஒரு மொழி.


அம்மொழியில்

இவை

"நடனம்" 

என்றழைக்கபட்டன.


Comments

Popular posts from this blog

சுமார்

எ னக்கே தெரியும் , 'இசைக்கலைஞர்களை இசை பார்த்துக் கொள்ளும் ' என்பது ஒரு உணர்ச்சிகரமான உண்மைதான் ஆயினும் நேற்றொரு கிட்டார் கலைஞனிடம்  பேச்சுக் கொடுத்தேன் என் தோளில் கையூன்றி  இதழ்கடை விரித்தார்... "சுமாரா பாத்துக்கும் பாஸ்"

வாய்ஸ் மெசேஜ் பாவங்கள்

தூ ராதி தூரம் சென்றுவிட்டாய் நீ உன் குரல்களோ  என்னிடமே தங்கிவிட்டன. காலம்  பேச்சைப் பாட்டாக்க வல்லது அடீ ... !  அந்தப் பாடல்களை இனி கேட்கவே முடியாது. உபயோக்கிக்கவும் முடியாத தூக்கியெறியவும் முடியாத பொருட்களின் துருவோடு துருவானது நம் நேசம் லேசாக அழுத்திப் பிடித்தால் போதும் எல்லாவற்றையும்  அழித்து விடலாம் என்கிறது  நவயுகம்.  அவ்வளவு பலத்திற்கு நானெங்கு போவேனென மறுகி நிற்கிறது ஒரு பழைய உயிர்

‘இதயம் முரளி'யரின் காலாதிகாலம்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை இன்று வெளியாகியுள்ளது. ‘இதயம் முரளி'யரின் காலாதிகாலம்  வாசிப்பதற்கான இணைப்பு  https://akazhonline.com/?p=13791