இன்னொரு முறையும் என் தலைக்குப் பின்னே ஒலித்தது சோக வயலின் அதற்கு என்னைத் தெரியும் ஆயினும் அது அதன் கடமையை ஆற்றுகிறது இதயத்தோடு உரசி உரசி இதயமாகவே மாறிவிட்டது சோகம் எனது இதயம் சோக இதயம் எனது இரத்தம் சோக இரத்தம் சோக வயலினில் சோகம் உண்டு இதம் உண்டு இனிமை உண்டு சோக வயலினை சோக வயலினால் ஒன்றும் செய்விட முடியாது. |
Comments