Skip to main content

வாழ்க!

 



முதன்முதலாக 

காதல்

நம்மை ஒரு கோவிலுக்குள் அழைத்துச் செல்கையில்

செருப்பைக் கொஞ்சம்

அலங்கோலமாக

 உதறிவிட்டேன்.

கடிந்து நீ சொன்னாய்..

"செருப்பு விடும் அழகிலிருந்தே

 வாழ்வின் ஒழுங்கு துவங்குகிறது..."


அன்றிலிருந்து

இரண்டு ரோஜாக்களை அருகருகே

அணைந்து வைக்கப் பழகிக் கொண்டேன்.


சொன்னது நீ என்பதால்

அதை அப்படியே நம்பி விட்டேன். 


விடாது 

வளர்த்துவருகிறேன் 

நம் ரோஜாக்களை

இன்று வரை. 


நெடுங்காலம் கழித்து

நேற்றுன்னை கடைவீதியில் கண்டேன்.


செருப்பைக் கொண்டு 

வாழ்வை ஒழுங்கு செய்ய முயன்ற 

சின்னஞ் சிறுமியே..! 


உன் பேதை நெஞ்சத்தழகு

வாழ்வாங்கு வாழட்டுமென்று

கூட்டத்துள் பதுங்கி 

ஒளிந்து கொண்டேன்.


Comments

Popular posts from this blog

சுமார்

எ னக்கே தெரியும் , 'இசைக்கலைஞர்களை இசை பார்த்துக் கொள்ளும் ' என்பது ஒரு உணர்ச்சிகரமான உண்மைதான் ஆயினும் நேற்றொரு கிட்டார் கலைஞனிடம்  பேச்சுக் கொடுத்தேன் என் தோளில் கையூன்றி  இதழ்கடை விரித்தார்... "சுமாரா பாத்துக்கும் பாஸ்"

வாய்ஸ் மெசேஜ் பாவங்கள்

தூ ராதி தூரம் சென்றுவிட்டாய் நீ உன் குரல்களோ  என்னிடமே தங்கிவிட்டன. காலம்  பேச்சைப் பாட்டாக்க வல்லது அடீ ... !  அந்தப் பாடல்களை இனி கேட்கவே முடியாது. உபயோக்கிக்கவும் முடியாத தூக்கியெறியவும் முடியாத பொருட்களின் துருவோடு துருவானது நம் நேசம் லேசாக அழுத்திப் பிடித்தால் போதும் எல்லாவற்றையும்  அழித்து விடலாம் என்கிறது  நவயுகம்.  அவ்வளவு பலத்திற்கு நானெங்கு போவேனென மறுகி நிற்கிறது ஒரு பழைய உயிர்

‘இதயம் முரளி'யரின் காலாதிகாலம்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை இன்று வெளியாகியுள்ளது. ‘இதயம் முரளி'யரின் காலாதிகாலம்  வாசிப்பதற்கான இணைப்பு  https://akazhonline.com/?p=13791