Skip to main content

Posts

‘இதயம் முரளி'யரின் காலாதிகாலம்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை இன்று வெளியாகியுள்ளது. ‘இதயம் முரளி'யரின் காலாதிகாலம்  வாசிப்பதற்கான இணைப்பு  https://akazhonline.com/?p=13791

வாய்ஸ் மெசேஜ் பாவங்கள்

தூ ராதி தூரம் சென்றுவிட்டாய் நீ உன் குரல்களோ  என்னிடமே தங்கிவிட்டன. காலம்  பேச்சைப் பாட்டாக்க வல்லது அடீ ... !  அந்தப் பாடல்களை இனி கேட்கவே முடியாது. உபயோக்கிக்கவும் முடியாத தூக்கியெறியவும் முடியாத பொருட்களின் துருவோடு துருவானது நம் நேசம் லேசாக அழுத்திப் பிடித்தால் போதும் எல்லாவற்றையும்  அழித்து விடலாம் என்கிறது  நவயுகம்.  அவ்வளவு பலத்திற்கு நானெங்கு போவேனென மறுகி நிற்கிறது ஒரு பழைய உயிர்

சுமார்

எ னக்கே தெரியும் , 'இசைக்கலைஞர்களை இசை பார்த்துக் கொள்ளும் ' என்பது ஒரு உணர்ச்சிகரமான உண்மைதான் ஆயினும் நேற்றொரு கிட்டார் கலைஞனிடம்  பேச்சுக் கொடுத்தேன் என் தோளில் கையூன்றி  இதழ்கடை விரித்தார்... "சுமாரா பாத்துக்கும் பாஸ்"

அன்புள்ள தம்பிக்கு

  இ ன்று அதிகாலையில் ஒரு தத்துவத்தை அனுப்பியிருந்தாய் பிறகு அரை மணி நேரம் கழித்து ஏனோ நீ அதை அழித்தும் விட்டிருந்தாய் அந்த  உண்மை உண்மைதான் அது எனக்குப்  பிடித்தே இருந்தது. அதை அவ்வளவு உறுதியாக அழித்துவிட்டதன் மூலம் நீ இன்னொரு உண்மையைச் சொல்கிறாய் அதுகூட  உண்மையாகத்தான் இருக்க வேண்டும் ஒரு உண்மையிலிருந்து இன்னொரு உண்மைக்குப் போக 30 மணித்துளிகள் போதும் என்கிற உண்மை இருக்கிறதே உள்ளதிலேயே  முக்கியமான உண்மை அதுதான் தம்பி

பினாயில் பாட்டிலும், குச்சித்துடைப்பமுமாய் ஒரு வசந்த சுந்தரன்

   ஒ ருவர் இன்னொருவருக்கு சால்வை அணிவிக்கும் அரசு அலுவலகத்தின் சம்பிரதாயமான நிகழ்வு அது ஊழியர்களும், அதிகாரிகளும் வரிசை கட்டி நிற்கிறார்கள் போட்டோவில் சம்பிரதாயமாக நிற்பது எப்படி என்பதை யாரும் அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை வரிசைக்குப் பின்னே தட்டிக்கும் பின்னே குதிகால்  உயர்த்தி தலை மட்டும் நீட்டி  ஒரு உருவம் மொத்தப்  படமும் அதுவே ஆகி என் சிந்தையை அழைக்கிறது போட்டோவில் விழுந்துவிடும் துடிப்பல்ல அது மூளியை  அலங்கரிக்க    வந்தவன் போல் அவன் வருகை

நினைவோ ஒரு பறவை

  இ ந்தமுறை மருத்துவர்  கண்டிப்பாகவே சொல்லிவிட்டார்… “நீங்கள் கண்டதையும் போட்டுக்  குழப்பிக் கொள்ளக் கூடாது”  எனக்கு ஓரளவு புரிகிறது தேநீர் மட்டுமே இருக்கும் தேநீரைச் சொல்கிறார் ‘கடி' க்கு வேறொன்றும் கூடாதென்கிறார் சலனமற்ற குளத்தைத்தான் சொல்கிறார்  எனில், எனது  நான்கு கழுதைகளையும் எங்கு வைத்துக்  குளிப்பாட்ட? எனக்கு நன்றாகவே புரிகிறது சாமான்ய நிலையிலிருந்து என்னை  சாமாதி நிலைக்குத் தூக்குகிறார்  மறைஞானத்தை மாத்திரையாக்கப் பார்க்கும்  இந்த நாச்சிமுத்து ஒரு வேளை ‘ லாவோட்சு' வின் வம்சாவழியோ என்னவோ? “இப்போதுதானே சொன்னேன்…” என்றொரு குரல் உலுக்க விழித்தேன் பாருங்கள்,  அதுகூட அவர் அதட்டியதில்லை நான் அதட்டியதுதான்.

காதலைப் பாடாதிருப்பதன் கடினம்

காமம் வதைக்காத உயிர் எது? எவ்வளவு லட்சியங்களை, எவ்வளவு உன்னதங்களை காவு கொள்ளும் காளி அது? எத்தனை மகத்துவங்கள் அதன் முன் வாலைச்சுருட்டி கொண்டு மூலையில் அமர்ந்திருப்பதை நாம் பார்த்துவிட்டோம். சங்கக்கவித் திரட்டு முழுக்கவும் தலைவியரைப் பசலை படாத பாடு படுத்தியுள்ளது. பரணர் பசலைக்கு கிணற்றுப் பாசியை உவமை சொல்கிறார். ஊரார் உண்ணத் தொடும் போது அது விலகி நிற்கிறது. மறுகணமே திரண்டுவிடுகிறது. அது போல் தலைவன் தொடுந்தோறும் தொடுந்தோறும் விலகி , விடுந்தோறும் விடுந்தோறும் பாய்கிறதாம் பசலை. ஒரு புலி போலவா? ஆம்... கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை இன்றைய அகழ் மின்னிதழில் வெளியாகியுள்ளது. முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=13223 நன்றி அகழ்! 

சிரம்தாழ்ந்த விண்ணப்பம் !

  கே ரட் கண்ணிற்கு மிக நல்லது இரு, இரு  பச்சையாக உண்பதே நல்லது முட்டை புரதச்சத்து மிக்கது இரு இரு  வெள்ளைக்கரு மட்டும்தான் நல்லது கீரை யுண்டால், பீடை யில்லை இரு, இரு முட்டையுடன் உண்டு தொலைக்காதே  ஆப்பிள் ஒரு  இரத்தக் காட்டாறு இரு, இரு உப்பிட்ட வெந்நீரில் நன்றாகக்  கழுவ வேண்டியது அவசியம் வானகமே, இளவெயிலே, மரச்செறிவே! இரு, இரு பால்காரன் வந்துவிட்டானா? ஆற்றுக்குளியல்  அருமையோ அருமை இரு, இரு கிடங்குகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது உடற்பயிற்சி மிக மிக முக்கியம் இரு, இரு அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தூங்காதே தம்பி, தூங்காதே! இரு, இரு எவ்வளவு உறக்கமோ, அவ்வளவு ‘விழிப்பு’ வெளி திறந்து கிடக்கிறது இரு, இரு ஃபீல் அட் ஹோம் பணத்தினைப் பெருக்கு இரு, இரு ரஸத்திலே தேர்ச்சி கொள் “நீ வாழ பிறரைக் கெடுக்காதே” இரு, இரு வலுத்ததே வாழும் பிறப்பு என்றிருந்தால் இறப்பு என்றிருக்கவே செய்யும் இரு, இரு சுமாராகவேனும் வாழ்ந்திருக்க வேண்டும் உன்னதங்களின் உன்னதம்  எதுவென்றுரைத்தால்  அது கவிதைதான் இரு, இரு கவிதையைப் பார்த்துக் கொண்டே  வாழ்கையை கோட்டை விட்டு விடக்கூடாது....

நாணத்தை நடிக்க முடியுமா?

கபிலர் கவித்துவத்திரட்டு  தொடரில்  ' கலித்தொகை' பாடல்கள் துவங்கியுள்ளன. கபிலரின்  கவித்துவ உச்சங்கள் நிகழ்ந்துள்ள நூல் என்று கலித்தொகையைச் சொல்லலாம். வரிக்கு வரி அடிக்கோடிட வேண்டிய பல பாடல்களைக்  கொண்டது.  நாடகத்தன்மையின் சுவாரஸ்யம் நிரம்பியது.  இத்தொடரில்  இதுவரை வெளியான கட்டுரைகளில் இதுவே சிறந்தது என்பது என் எண்ணம். காரணம், கட்டுரையாளன் அல்ல, கவிஞன். "நாணத்தை நடிக்க முடியுமா?" இணைப்பு : https://akazhonline.com/?p=12972 https://akazhonline.com/?p=12972 நன்றி அகழ்!

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை அகழ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையுடன் கபிலரின் புறப்பாடல்கள் நிறைவடைகின்றன. இனி முழுக்கவும் அகப்பாடல்கள்தான். .. மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு இரக்கம் கொண்டவனால் , மனைவிக்குக் கொதிக்கும் என்பதை அறியமுடியவில்லையா? அது அப்படித்தான். விசேஷமான ஒன்றில் ஆகச்சிறந்தவராய் விளங்கும் ஒருவர் , சாதாரண ஒன்றில் தடுமாறிச் சரிவதை நாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். மயிலுக்கு இரங்கி, மனைவிக்கு இரங்கா மாண்பை எந்தச் சோதனைக் கூடத்தில் இட்டு பரிசோதிப்பது? எவ்வளவு ஆய்ந்தாலும் அதில் குழப்பமான முடிவுகளே வரக்கூடும். மேலும் காமம், எதிலும் துளையிட்டுவிடும் ஒரு ராட்சத இயந்திரம்... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது https://akazhonline.com/?p=12302

வருக! வருக!

  செ ழு செழுத்துச் சிவந்து நிற்கும் மே ஃப்ளவர் மரத்தை  இந்த அதிகாலையில்  கண்ணுறும்   நாய்க்குட்டி ஒன்று மெல்லென  நாலு குரை குரைக்கிறது  புதிய விருந்தை வரவேற்கும் முகமாய்

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை

சின்னஞ் சிறியனவே! பென்னம் பெரியனவே!

கபிலர் கவித்துவத் திரட்டின் அடுத்த கட்டுரை இன்றைய அகழ் இதழில் வெளியாகியுள்ளது  மூவாயிரம் ஆண்டுகள் கழித்து இந்தக் கதையின், இதே பாத்திரங்கள், அப்படியே பாத்திரம் மாறாது நமது சினிமாவில் தோன்றினர். “ என்கிட்ட ரெண்டு பொண்ணு இருக்கு… பிடிச்சா கட்டிக்குங்க…” என்று ஒரு தமிழறிஞர் தமாசு செய்தார். கபிலர் என்கிற புலவர்க்குப் பதில் இப்போது பட்டிமன்ற நடுவர். பலரும் ஏற்க மறுக்கும் கட்டங்கரிய பெண்களாக பாரி மகளிர். இவ்வளவும் தற்செயலா? கச்சிதமா? ஒரு இயக்குநரின் தனி மூளையில் உதித்த காட்சியாக இது எனக்குத் தெரியவில்லை. நமது ‘ பெரியோர்கள் பலரும் சேர்ந்து நடத்திய நாடகம் ‘ என்றே எண்ணத் தோன்றுகிறது... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு  கீழே உள்ளது. https://akazhonline.com/?p=12062

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."