Skip to main content

Posts

Showing posts from December, 2009

அதனாலென்ன...

அதனாலென்ன? விகடன் பொங்கல் சிறப்பிதழில் எனது கவிதைகள் வந்திருக்கின்றன. அழகான வடிவமைப்புடன் இடம் பெற்றிருக்கிற அக்கவிதைகளில் இரண்டு இடங்களில் விகடன் கத்தரி வைத்திருக்கிறது. ( வெறும் இரண்டே எழுத்தை தான் நீக்கியிருக்கிறார்கள் என்ற போதும் மனம் வேதனை கொள்ளவே செய்தது). “அதனாலென்னா? “ என்று ஒரு கவிதைக்கு புதிதாக ஒரு தலைப்பு வைத்திருக்கிறார்கள். நம்பர் 1 வார இதழில் உன் கவிதை வரும் என்றால் ‘அதனாலென்ன’ டா இசை!..... நண்பர் சுகுணா திவாகருக்கு என் நன்றியும், விகடனுக்கு என் நன்றியும், வருத்தமும். எடிட் செய்யப்படாத எனது கவிதைகள் கீழே... ```````````````````````````````````````````````````` ஓயாத திகில் என் உடல் ஆம்புலன்ஸ் தலை சைரன் பல்ப் மனம் இடுது நாசஊளை. ````````````````````````````````````````````````` 999 வாழ்க்கை இரட்டை வாழ்க்கை வாழ்கிறாய் எனக் கடிந்து கொள்கிறாயே நானென்ன அவ்வளவு நீதிமானா? அடி தோழி! நான் 999 வாழ்க்கை வாழ்கிறேன். ````````````````````````````````````````````````````````````````````````````` உன்னை அடைவது ... உன்னை முத்தமிட வேண்டியே உன் இதழ்களை முத்தமிடத் தவிக்கிறேன். உன் இதழ்களை முத்தம
திடீரென பீடித்துக்கொள்ளும் மனச்சோர்வு திடீரென பீடித்துக்கொள்ளும் மனச்சோர்வு அதற்கு ஒரு காரணத்தை சொல்ல மறுக்கிறது. சிகரெட்டுக்களை புகையாக்குகிறது. திடீரென மனச்சோர்வால் பீடிக்கபடுபவர்களுக்கென்றே எப்போதும் விட்டத்தில் ஒரு பல்லி அமர்ந்திருக்கிறது. நீங்கள் மனச்சோர்வால் பீடீக்கப்படுகையில் உங்கள் நண்பர்களின் எல்லா இணைப்புகளும் உபயோகத்தில் இருக்கின்றன. உங்களுக்கு நீங்களே பேசிக்கொள்ள உருவாக்கிடும் வரிகளை யாரோ ஒருவன் உருட்டுக்கட்டையால் தலையில் அடிக்கிறான். திடீரென பீடித்துக்கொள்ளும் மனச்சோர்வு ஒன்பதாவது சுயமைதுனத்தில் இரத்தமாக வெளியேறுகிறது. பிறகு நினைவும் இல்லை. சோர்வும் இல்லை.