Skip to main content

Posts

Showing posts from September, 2016

ஒழி !

அவ்வளவு ஜ்வலிப்பு
என் கண்களுக்குப் பழக்கமில்லை
எனவே
உன்னை எடுத்து ஓங்கி உடைத்தேன்
இப்போது
மங்கிய குண்டுபல்பின் கீழே
ஆசுவாசமாய் பீடி புகைக்கிறேன்

வாழி !

உனக்கும் எனக்குமிடையில்
ஒன்றுமில்லை
என்பதற்குப் பதிலாக
இருக்கிறது இந்தச் சண்டை. 
இது வாழி!

பிரிவு

புழங்கும் சொல்தான்
என்றாலும், பொருள் தேடிப் பார்த்தேன்
விஷமம் பிடித்த அகராதியொன்று
" பிரிவு என்பது
இமைப்பொழுதும் நீங்காதிருத்தல் “ என்கிறது .

இன்றின் கேரட்

இன்றைய நிலவரப்படி கால்கிலோ கேரட்  7 ரூபாய்கு விற்கப்படுகிறது நான் எப்படியும் தினமும் குறைந்தது இருநூறு ரூபாய் சம்பாதித்து விடுவேன் ஆக எப்படியும் எனக்கு கேரட் உண்டு கேரட்டுக்கு  இந்த கேரட் நிறம் எப்படி வந்தது ? மேலும், கேரட் எங்கு எப்படி விளைகிறது ? அதன் மூலக்கூறுகள் யாவை ? இந்த வெங்காயமெல்லாம் எனக்குத் தேவையில்லை நமக்கு ஆயிரத்தெட்டு  சோலிகள் கிடக்கின்றன ஓவராகச் சிந்திக்காதே .. இரண்டு மிளகாயைக் சேர்த்துப் போட்டு.. தேங்காயை துருவிக் கொட்டினால்...  அட... டடா... விலைவாசி விண்ணைமுட்டி அதற்கு அப்புறமாய் பறந்தாலும் நம் கேரட்டை நம்மிடமிருந்து யாராலும் பறித்து விட முடியாது போதும் உன் கேரட் புராணம்... நாளை இந்த ப்ளாஸ்டிக் டம்ளர்களை மாற்றி விட வேண்டும் ஒரு மாசத்துக்கும் மேல் ஆகிறது.. ஆமாம்.. மாற்ற வேண்டும்... மாற்ற வேண்டும் நீ உன் டம்ளரை எடுத்துக் கொள்... ஓ.. நீ தான் இல்லை அல்லவா ? சண்டையிட்டுப் பிரிந்து விட்டாய்.. சரி... பிரிந்தால் போய் விட  வேண்டுமா என்ன ?

நிலம் நோக்கும் இசை - சாம்ராஜ்

     இசையின்கட்டுரைகள்குறித்துப்பேசவேநான் பணிக்கப்பட்டிருக்கிறேன். என்றாலும், இசையின்ஒருகவிதையோடுஇதைத்தொடங்கலாம்என்றிருக்கிறேன். காரணத்தோடுதான்... குடும்பநாய்; சிலசித்திரங்கள் 1. ஒருகுடும்பநாய் குடும்பத்தைதின்று குடும்பத்தைபேண்டு அதையேதின்று அதையேபேழ்வது 2.  உண்மையில்குடும்பநாய்களுக்கு  சங்கிலியோகயிறோதேவையில்லை 3.  குடும்பநாய்களை