Skip to main content

Posts

Showing posts from 2009

அதனாலென்ன...

அதனாலென்ன? விகடன் பொங்கல் சிறப்பிதழில் எனது கவிதைகள் வந்திருக்கின்றன. அழகான வடிவமைப்புடன் இடம் பெற்றிருக்கிற அக்கவிதைகளில் இரண்டு இடங்களில் விகடன் கத்தரி வைத்திருக்கிறது. ( வெறும் இரண்டே எழுத்தை தான் நீக்கியிருக்கிறார்கள் என்ற போதும் மனம் வேதனை கொள்ளவே செய்தது). “அதனாலென்னா? “ என்று ஒரு கவிதைக்கு புதிதாக ஒரு தலைப்பு வைத்திருக்கிறார்கள். நம்பர் 1 வார இதழில் உன் கவிதை வரும் என்றால் ‘அதனாலென்ன’ டா இசை!..... நண்பர் சுகுணா திவாகருக்கு என் நன்றியும், விகடனுக்கு என் நன்றியும், வருத்தமும். எடிட் செய்யப்படாத எனது கவிதைகள் கீழே... ```````````````````````````````````````````````````` ஓயாத திகில் என் உடல் ஆம்புலன்ஸ் தலை சைரன் பல்ப் மனம் இடுது நாசஊளை. ````````````````````````````````````````````````` 999 வாழ்க்கை இரட்டை வாழ்க்கை வாழ்கிறாய் எனக் கடிந்து கொள்கிறாயே நானென்ன அவ்வளவு நீதிமானா? அடி தோழி! நான் 999 வாழ்க்கை வாழ்கிறேன். ````````````````````````````````````````````````````````````````````````````` உன்னை அடைவது ... உன்னை முத்தமிட வேண்டியே உன் இதழ்களை முத்தமிடத் தவிக்கிறேன். உன் இதழ்களை முத்தம
திடீரென பீடித்துக்கொள்ளும் மனச்சோர்வு திடீரென பீடித்துக்கொள்ளும் மனச்சோர்வு அதற்கு ஒரு காரணத்தை சொல்ல மறுக்கிறது. சிகரெட்டுக்களை புகையாக்குகிறது. திடீரென மனச்சோர்வால் பீடிக்கபடுபவர்களுக்கென்றே எப்போதும் விட்டத்தில் ஒரு பல்லி அமர்ந்திருக்கிறது. நீங்கள் மனச்சோர்வால் பீடீக்கப்படுகையில் உங்கள் நண்பர்களின் எல்லா இணைப்புகளும் உபயோகத்தில் இருக்கின்றன. உங்களுக்கு நீங்களே பேசிக்கொள்ள உருவாக்கிடும் வரிகளை யாரோ ஒருவன் உருட்டுக்கட்டையால் தலையில் அடிக்கிறான். திடீரென பீடித்துக்கொள்ளும் மனச்சோர்வு ஒன்பதாவது சுயமைதுனத்தில் இரத்தமாக வெளியேறுகிறது. பிறகு நினைவும் இல்லை. சோர்வும் இல்லை.

‘காயசண்டிகை’ நூல் விமர்சனம்

சிக்கலான அல்ஜீப்ரா கணக்குகளுக்கு திணறும் எளிய மூளை ‘காயசண்டிகை’ கவிதை நூலை முன் வைத்து.. நவீன கவிதைகளில் படிந்திருக்கும் துயரத்திற்கு உலகப் போருக்குப் பிறகான மனித மனங்களில் படர்ந்த இருள் ஒரு காரணமாக சொல்லப்படுவதுண்டு. துயரம் மனிதனோடு சேர்ந்தே பிறக்கிறது. ஆனால் உலகப் போரின் பேரிழப்புகளின் போதே அது பெரிதாக, ஒட்டு மொத்தமாக உணரப்பட்டது என்று இதை நாம் புரிந்து கொள்ளலாம். இப்படி துயரக் கறை கொண்ட கவிதைகளின் மேல் தற்போது வைக்கப்படும் ஒரு விமர்சனம் “ஒப்பாரி வைப்பது போல் இருக்கிறது” என்பது. ஒப்பாரிப் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் ஏற்கனவே ஒரு கலைப்படைப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிற நிலையில், இவ்விமர்சனத்தை நிர்தாட்சண்யமாக ஒதுக்கி விடலாம். ஒரே ஒரு நிபந்தனை, அப்பாடல்கள் கலையின் அழகியலோடு வெளிப்படவேண்டும் அவ்வளவே. நவீன கவிதையின் குறிப்பிடத்தக்க ஆளுமைகள் பலரிடமும் ஒரு ஓயாத துயரத்தைக் காணமுடிகிறது. துயரக் கறைக் கொண்ட இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் அடங்கிய இவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘காயசண்டிகை’ 2007ல் வெளிவந்து தற்போது பரவலாக கவனம் பெறத் துவங்கியிருக்கிறது. வாழ்வு தரும் நெருக்கடிகள் வழங்கியவை இக்கவித
விசில் ஒலிக்கும் சமோசா பொறிஞர் ஆனந்துக்கு இன்றைய தேநீர் இடைவேளையின் போது ஒரு சமோசா சாப்பிடவேண்டும் என்று தோன்றியது. தாளித்த வெங்காயத்தின் பொரித்த வாடைக்கு நாசி கிரங்கியது. கண்களை மூடி ஒரு முறை முகர்ந்ததில் அவர் தன் 22 வருடங்களை உள்ளிளுத்துக் கொண்டார். முக்கோண வடிவ சமோசா நீள் சதுர வெண் திரையானது. பொறிஞர், இப்போது லட்சுமி டாக்கீஸின் மணல் குட்டின் மேல் அமர்ந்திருக்கும் சிறு பொடியன். தங்க மீனை எடுப்பதற்காக தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கிறார் கமலஹாசன். நினைத்ததை முடித்தாக வேண்டும் தலைவர். மூதாட்டிகள் கடவுளைப் பிரார்த்திக்கிறார்கள். ஊஞ்சலைப் போல ஆடிக்கொண்டிருக்கிறது கயிறு. சற்றைக் கெல்லாம் சடசடவென எழுந்த கரவொலிகளுக்கிடையே அரங்கைக் கிழிக்கிறது ஆனந்தின் விசில் சத்தம்.
எழுத வந்த கதை எழுத வந்த கதையை எழுதும் படி தமிழ் கேட்டிருந்தார். இப்படி எழுதும் அளவுக்கு நான் வலையில் பெரிதாக எதையும் எழுதவில்லை. எழுத வந்த கதை, கடந்து வந்த காட்டாறு என்றெல்லாம் உண்மையில் என்னிடம் எதுவும் இல்லை.தழிழ் எழுதி இருப்பது போல வலையில் எழுத வந்ததற்க்கான வலுவான காரணம் எதுவும் என்னிடம் இல்லை.அதனால் உண்மை எதுவென்று யோசித்து எழுத முயன்றிருக்கிறேன். முதல் சந்திப்பிலேயே உங்கள் கவிதைகள் சிலதை மனப்பாடமாக சொல்லி உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வாசகன் ஒருவன் உங்களுக்கு கிடைத்திருக்கிறானா? உங்கள் பெயர் சபைகளில் உச்சரிக்கப்படும் போது தன்னையும் சுற்றத்தையும் மறந்து கைதட்டிக் குதூகலித்து, சிறு பிள்ளை கோலம் கொள்ளும் நண்பன் ஒருவன் உங்களுக்கு இருக்கிறானா? எனக்கு அப்படி ஒருவன் உண்டு. அவன் நரன். அவன் தான் சில மாதங்களுக்கு முன் “உன் கவிதைகளை ப்ளாக் கில் போடலாமா” என்று கேட்டான். நான் “அப்படீனா என்ன” என்று கேட்டேன், பொதுவாக நவீன உலகின் மூளைச்சாவரியில் கலந்து கொள்ளாமல் ஓரமாக ஒதுங்கி நடப்பதே என் சுபாவம். அறிவியல் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற புதிய வாய்ப்புகளை அவசர அவசரமாக கற்றுத்தேர்வதில் எனக்கு

poem

கண் கொள்ளா காட்சி கண் கொள்ளா காட்சி என கத்தி ஒன்றைக் கண்டேன். அதன் தகதகப்பில் மனமழிந்து பித்தானேன். நெஞ்சைக் கீறி ரத்தமீந்தேன் அதன் கூர் நுனிக்கு. முதல்கலவியென வருடி வருடித் திளைத்தேன். ஏற்கனவே வெட்டுண்ட ஒரு கோடி தலைகளுள் ஒன்றாகும் மோகத்தால் கொல்! கொல் ! என்று மண்டியிட்டு கதறுகிறேன்.

கவிதை

குத்துப் பாட்டின் அனுபூதிநிலை இந்த வீட்டின் ஜன்னல்களை மூடினேன். கதவுகளைச் சாத்தினேன் மறவாமல் இவ்வுலகை வெளியே தள்ளி தாழிட்டேன் இசை துவங்கியது பேழையிலிருந்து வெளிப்பட்ட குரலுருவும் நானும் கைகோர்த்து ஆடத் துவங்கினோம். ஆட்டம் ... குதியாட்டம் ... பேயாட்டம் .... மொழ மொழன்னு யம்மா யம்மா ... மொழ மொழன்னு யம்மா யம்மா ... தலை வழி பீறிட்டு விண்முட்டி அடிக்குதொரு நீரூற்று தடதடன்னு நடக்குறா மடமடன்னு சிரிக்குறா வெட வெடன்னு இருக்குறா கொட கொடன்னு கொடையிறா மொழ மொழன்னு யம்மா யம்மா ... மொழ மொழன்னு யம்மா யம்மா ... ஆயிரம் கரங்கள் கூடி ஆனந்த கொட்டடிக்க அதிரும் நானொரு களி கொண்ட பேரிகை பஞ்சுமிட்டாய் இடுப்பழகி ஓலக்கொட்டாய் உடுப்பழகி ப்பெப்பர் முட்டாய் பல்லழகி க்கொட்டப் பாக்கு கண்ணழகி ராங்கீ ... மனச வாங்கீ... எனதுடலா இது எனதுடலா இப்படி பூரிப்பில் துடிதுடிக்கும் இது என்ன எனதுடலா ? எனதுடலா? எனதுளமா இது எனதுளமா ஈனக்கவலைகள் எரியும் நெருப்பில் ஜொலிப்பது என்ன எனதுளமா ? எனதுளமா? (ராங்கி அனுராதா ஸ்ரீராமுக்கு ..)

நூல் விமர்சனம்: நக்கீரன்

உறுமீன்களற்ற நதியிலும் வாடி நிற்காத கவிதைகள் அகம் புறம் இந்த இரண்டுக்கு நடுவே இன்று பெர்லின் சுவர் எதுவும் கிடையாது. ஒரு மெல்லிய சவ்வுதான் இருக்கிறது. அதனூடாக சவ்வூடு பரவலைப் போல் புறமானது அகத்துக்குள் என்றோ ஊடுருவி விட்டது. இதை நன்றாக உணர்ந்து புரிந்து கொண்டவர்கள். அல்லது தன்னையறியாமலேயே உள்வாங்கிக் கொண்டவர்கள்தான் இன்று நல்ல கவிஞர்களாக அறியப்படுகிறார்கள். முதல் இரு உலகப் போர் நிகழ்வுக்ளை ஒட்டி கவிதை பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி வந்தது நாம் அறிந்ததே. இன்று உலகமயமாக்கல் எனும் அரூப ஆயுதத்தை கைக்கொண்டு, வளந்த நாடுகள் ஒரு மாய யுத்தத்தை வளரும் மற்றும் மூன்றாம் உலக நாடுகள் மீது நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில் அவதிக்குள்ளாகியிருக்கும் வெகு மக்கள் திரளுள் ஒருவராகவே கவிஞனும் வாழ நேர்கிறது. அத்தகு கையறு நிலையில் சக மக்கள் புலம்பிக் கொண்டிருக்க, வித்தை தெரிந்த கவிஞன் அப்புலம்பலை பகடியாக்கி கவிதை செய்கிறான். ஆனாலும் கூரான கத்திக்கு முன் நிற்க நீ ஒன்றும் சேகுவாரா அல்ல என்று சக படைப்பாளிகளை எச்சரிக்க கூடிய அளவிற்கு கவிஞன் இச்சமூகத்துள் தன்னிலை குறித்த சுயபிரக்ஞையுடன்தான் இருக்கிறான். மேலும் தன்
எழுபது கடல் எழுபது மலை எழுபது கடல் எழுபது மலை தாண்டி எங்கோ இருக்கிறது நான் தழுவ வேண்டிய உடல் கடலெங்கும் சுறாக்கள் அலைகின்றன மலையெங்கும் கொடுங்காவல் நிலவுகிறது முதல் கடலின் பாதியில் நிற்கிறது எரிபொருள் தீர்ந்த படகு நான் ரொம்பவே சோர்ந்துவிட்டேன் தாகமாய் தவிக்கிறது எனக்கு இவ்வளவு பெரிய கடலுக்கு நடுவே எனக்கு ஒருவாய் நீரில்லை இன்னும் 69 1/2 கடல்களும் எழுபது மலைகளும் மீதமிருக்க துளியும் எள்ளலின்றி குரல் தழுதழுக்கச் சொல்கிறேன் “யாம் ஷகிலாவின் பாத கமலங்களை வணங்குகிறோம்” - நன்றி: உயிர் எழுத்து
கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறது கர்த்தர் வருகிறார் அவர் நமக்காய் கொண்டு வரும் புளித்த அப்பங்கள் ரொம்பவே புளித்து விட்டன ஆனால், கர்த்தர் வருகிறார் உங்கள் அன்பில் நண்பர்களுக்கு சலிப்பேறி விடலாம் உங்கள் காதலியை புத்திசாலிகள் களவாடிக் கொள்ளலாம் கர்த்தர் வருகிறார் பாதி வழியில் அவர் வாகனம் பழுதாகி நின்று விட, அவர் நடந்து வருகிறார் ஆனாலும் கர்த்தர் வருகிறார் இன்னுமொரு தேர்தல் முடியட்டும் இன்னொரு மக்களாட்சி மலரட்டும் கர்த்தர் வருகிறார் எப்போதும் மிரட்டிக் கொண்டிருப்போர் இன்னும் கொஞ்சம் மிரட்டட்டும் எப்போதும் இறைஞ்சிக் கொண்டிருப்போர் இன்னும் கொஞ்சம் இறைஞ்சட்டும் இரட்சிப்பின் நாயகர் வருகிறார் கர்த்தர் ஒருவரே அவருக்கு உதவியாளர்கள் யாருமில்லை அவரே எல்லா இடங்களுக்கும் வர வேண்டி இருக்கிறது ஆனாலும் அவர் வருகிறார் நீதியின் மீது பசிதாகமுடையோருக்கு இன்னும் கொஞ்சம் பசிக்கட்டும் வெகு காலம் பற்கடிப்பில் உள்ளோர் இன்னும் கொஞ்சம் கடிக்கட்டும் கர்த்தாதி கர்த்தர் வருகிறார் இன்னும் கொஞ்சம் எரிகணைகள் வீழட்டும் இன்னும் கொஞ்சம் ஓலங்கள் கூடட்டும் கர்த்தர் வருகிறார் பயப்படாதே சிறு மந்தையே! கர்த்தர் on the way.
துயரத்தின் கை மலர் இசை கவிதையைப் பற்றிய எந்தவொரு பேச்சும் முழுமையடையாததே. விடுபடல்களைக் கொண்டதே. கவிதை நம் எல்லாப் பேச்சுகளுக்கும் அப்பால் எங்கோ நிகழ்கிறது. அதனாலேயே நாம் கவிதையைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். ஒரு கணத்தில் கவிதையைப் பற்றி எல்லாம் தெரிந்துவிடுகிறது. இன்னொரு கணத்தில் தெரிந்ததெல்லாம் மறந்து போகிறது. இந்த பேச்சும் முழுமையடையாததே. விடுபடல்களைக் கொண்டதே. இது நிச்சயமற்ற பாதைகளின் வழியே பயணித்து கவிதையை தொட்டுவிட முயல்கிறது. இந்தக் கட்டுரையில் பாதியை நான் மாணவர்களை நோக்கியும் மீதியை எனக்கு நானே என்னை நோக்கியும் எழுதியிருக்கிறேன். ------ ------ ----- நீங்கள் கவலை கொள்ளாதிருங்கள். நாம் எல்லோரும் கவிஞர்களாகவே இருக்கிறோம். கவிதை நம் வாழ்விலிருந்து மெல்ல அசைந்து முகம் காட்டுகிறது. இவ்வாழ்க்கை மனம் கசந்து அழவைக்கிறது, மகிழ்ச்சியில் திளைக்கடிக்கிறது. காரணமில்லாமல் தனிமைக்குள் தள்ளுகிறது. பயமுறுத்துகிறது. உற்சாகமூட்டுகிறது. தாங்க இயலாத அளவிற்கு அன்பையும் சகிக்க இயலாத அளவிற்கு துரோகத்தையும் பரிசளிக்கிறது. கொலை செய்ய ஆத்திரமூட்டுகிறது. தற்கொலைக்குத் தூண்டுகிறது. அவமானப்படுத்துகிறது
சிவாஜிகணேசனின் முத்தங்கள் D.சிவாஜி கணேசன் ஒரு வங்கியின் காசாளராக பணியாற்றி வருகிறார். எப்போதும் கலைந்த சிகையோடும் அழுக்கேறிய உடைகளோடும் காணப்பட்டாலும் இயல்பிலேயே அழகானவர் அவர். பூக்கள்,குழந்தைகள் மற்றும் பழைய சினிமா பாடல்களின் ரசிகர். சிவாஜிக்கு மூன்று சகோதரர்கள் மூவரும் வசிப்பது இன்று முவ்வேறு திசைகளில். ”ராஜாக்கள் மாளிகையில் காணாத இன்பமடா” என்கிற பாடல் வரியை எப்போதும் கேட்டாலும் அப்போதே அழுதுவிடுபவர் அவர். குடிப்பதற்கு முன் மது புட்டியை ஆழ்ந்து முத்தமிடும் பழக்கமுள்ள அவர், வங்கியின் வாடிக்கையாளர்களை முத்தமிட்ட குற்றத்திற்காக இரண்டு முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் ‘இனிமேல் இதுபோல் நிகழாது’ என்கிற ஒப்புதலுடன் இரண்டாம் முறை பணியில் சேர்ந்த தினத்தில் ‘தங்களையும் உடன் பணிபுரியும் ஊழியர்களையும் மட்டுமாவது முத்தமிட்டுக் கொள்ளலாமா?” என்றவர் பரிதாபமாக கேட்க மேலாளர் தலையில் அடித்துக் கொண்டார். (செல்மா பிரியதர்ஸனுக்கு) நன்றி: உயிர்மை