Wednesday, November 28, 2012

தோத்தகாலிகளின் பாடல் வருகிறது....ரஜினிசார், அந்த ஏரி இப்போது கடலாகிவிட்டது.
பொங்குமறிகடல்....
இன்று நீங்கள் தனியனுமல்லன்
தொடுவானம் முட்டி நிற்கும் எண்ணற்ற படகுகளில்
அமர்ந்திருக்கும் எல்லோரும் நீங்கள்தான்.
நமது பரட்டைத்தலைகளை காற்றில் சிலுப்பிக்கொள்வோம்
நாமெதற்கும் பொறுப்பல்ல..
நம்மை துடுப்புவலிக்க வைத்தவன் எவனோ
அவனே அவர்களை நீருக்குள் பிடித்து தள்ளினான்
கண்களை மூடி ஒருமுறை காண்போம்
அந்த முத்தன்ன வெண்நகையை..
பிறகு பாடுபோம் நம் பாடலை...
கண்டம் கருக்கடிக்கும் அப்பாடலை...
வஞ்சத்தில் கமறும் பலநூறு குரல்களின்
ஒத்திசையா ஊளையிது.
நாம்  இக்கடலின் கர்ணத்தில் கடூரத்தை ஊதுவோம்.
ஊழி எழுந்து
நீள்விசும்பலைந்து
ஊர்புகுந்தாட,
நம் ஆளுயரப்  பெருமூச்சில்
நீதியின் மலைதீபம் பொசுக்கென்று அணைகிறது

Tuesday, November 27, 2012

தனிமை

அதி ஆழமான பாழ்கிணறு
என் தனிமை
ஒரு சொல்லிட்டு
 நீ அதை நிரப்பு

Wednesday, November 14, 2012

உதயகுமார் பேய்யாரது .. ?

பேயது !

  •          
நான் 30,000 ரூபாய்
செலவு செய்து சுவரோடு ஒட்டிக் கொள்ளுமாறு
ஒரு ப்ளாஸ்மா டீவி வாங்கிவைத்தேன்.
சனியன், அது வழியாகத்தான்
ஒரு பேய் வந்து குதிக்கிறது என் வீட்டில்.
  •           
உன்னோட் சேனல் மூனு
அங்கு மட்டும் இரு.
தொன்னூறு சேனல்களுக்கும் வந்து தொலைக்காதே.
  •       
எனக்குத்தான் லீவ் கிடைக்கலியே
அதான் எழுத்தாளர் கூட்டறிக்கையில்
கையெழுத்திட்டிருக்கிறேனே ?
  •    

ஆமாம்..
நேற்று ஏ.சி பாரில்தான் பீர் குடித்தேன்.
அதுக்கு...?
  •   

அரசொருபக்கம் கண்காணிக்கிறது
பேயொருபக்கம் கண்காணிக்கிறது
  •       
என் கைச்சரசத்தில்
இடை நுழைந்து தடைசெய்ய
உனக்கு வெட்கமாக இல்லையா?
  •        
தம்பி, என்ன எழுதுகிறீர்?
கவிதை...
அரசியல் கவிதை..

Saturday, November 10, 2012

கொக்கு பறக்குதடி பாப்பா !
ஐயன்மீர் ,
தங்கள் விமானங்கள்
இன்னும் கொஞ்சம் தாள வாராதா ?
வந்தால்
தாவி நானதன் இறக்கையில் தொத்திக்கொள்வேன்
போகிற வழியில்
வால்மார்டில் குதித்துக் கொள்வேன்

Thursday, November 8, 2012

கானம்- ரவிசுப்பிரமணியன் கவிதை


ம்...

ஸ...

விரல்களால் காது மடல்மூடி
கூட்டும் சுருதியில் ரீங்காரம்
கட்டுக்குள் வருகுது சகலமும்

மண்கிளறி உரமிட்டு
விதைவிதைத்து நீர் ஊற்றி
தளிர் கிளைத்து மேலெழும்ப
செடியாகி மரமாகி
பூத்துக் குலுங்கும் ஸ்வரராக விருட்சங்கள்

 பாடகி உருகி ராகத்தில் கரைகிறாள்
தோப்பாகிறது அரங்கம்


தோப்பில் திரியும் கவலைகளை
தேர்ந்த இடையனாய் மெல்ல மேய்த்து
வெளியில் நிறுத்திக் கதவைச் சாத்தி
இன்னொரு அற்புதம் செய்கிறாள் அவள்